search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கைதி"

    • 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
    • முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

    ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.
    • புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    புழல் சிறையில் இருந்து ஜெயந்தி என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றார். கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறை வாசல் வழியாகவே வெளியேறியது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் தப்பியோடிய கைதி ஜெயந்தி பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அந்த வழியே வந்த ஒரு பெண், சாந்தகுமாரி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
    • போலீசார் அதிர்ச்சி அடைந்து கவி தாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி.

    இவர் தக்கலை பஸ்நிலையம் அருகில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு பெண், சாந்தகுமாரி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.

    ஆனால் சாந்தகுமாரி சுதாரித்துக் கொண்டு நகையை காப்பாற்ற போராடினார். மேலும் அந்த பெண்னை பிடித்து தக்கலை போலீசிலும் ஒப்படைத்தார். போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.

    இதில் அந்த பெண் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மனைவி கவிதா (வயது35) என்பது தெரியவந்தது. அவர் பல இடங்களில் திருடியிரு ப்பதும், பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதும் விசா ரணையில் கண்டு பிடிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த கவிதா, கழிவறை செல்ல வேண்டும் என கூறி உள்ளார். தொடர்ந்து அங்குள்ள கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து கவி தாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை மாலையில் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்பு தக்கலை பெண்கள் சிறை யில் அடைத்தனர்.

    ×