search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் ஆண்டவர்"

    • 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
    • முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

    ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் உடல் வைக்கப்பட்டது.
    • 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்.

    வாடிகன் சிட்டி:

    முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.

    முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வரும் 5-ம் தேதி காலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்
    • இவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று முதல் வைக்கப்படுகிறது.

    வாடிகன் :

    முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

    600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.

    முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்படுகிறது.

    அதை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள்.
    • அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:-

    போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை.

    இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.

    • போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.
    • இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வாடிகன்சிட்டி:

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அங்கு நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-

    அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    ×