search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் ஊழியர்"

    • தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
    • அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    சிறிய குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல மறுத்து வீட்டில் அழுது புரண்டு அடம்பிடிப்பது வழக்கம். குழந்தைகளை பெற்றோர் தூக்கிச்சென்று அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்வதை பெரும்பாலும் காண முடியும். குழந்தைகளும் வேறு வழியில்லாமல் அங்கன்வாடி ஊழியருக்கு பயந்து அங்கே இருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.

    ஆனால் திருவள்ளூரில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடன் போட்டி போட்டு வந்து செல்கிறார்கள். இதற்கு அங்குள்ள அங்கன்வாடி பெண் ஊழியரின் கனிவான உபசரிப்பு மற்றும் வரவேற்கும் விதம் காரணமாக உள்ளது. இந்த உபசரிப்பு அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த "ஸ்மைல்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து உள்ளார். இது மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முன்பள்ளிக் கல்வியில் ஆதரவளிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. குழந்தைகள் உட்கார நாற்காலி வசதி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ருக்மணிதேவி என்பவர் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வித்தியாசமாக வரவேற்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை கை குலுக்குதல், வணக்கம் தெரிவித்தல், கட்டி அணைத்தல், கைகளால் "பஞ்ச்" கொடுப்பது என வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கன்வாடி மையத்துக்கு துள்ளி குதித்தபடி செல்கிறார்கள்.

    மேலும் குழந்தைகள் தங்களை வரவேற்கும் விதத்தை தேர்வு செய்யும் வகையில் அங்கன்வாடிமைய அறையின் வாசல் முன்பு இதற்காக கை குலுக்குதல், கட்டி அணைத்தல், வணக்கம் தெரிவித்தல், கைகளால் பஞ்ச் ஆகியவை அடங்கிய வரைபடம் ஒட்டப்பட்டு உள்ளது.

    இதில் ஒன்றை குழந்தைகள் தேர்வு செய்ததும் அதன்படி அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவி வரவேற்று அனுப்புகிறார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். குழந்தைகளை வரவேற்கும் அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவியை அவர் பாராட்டி உள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் ருக்மணி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அங்கன்வாடி மையத்துக்கு காலையில் வரும் குழந்தைகளை எப்போதும் இதுபோல் தான் வரவேற்பேன். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக குழந்தைகளுடன் நெருக்கமா இருக்க முடியும். இங்கு மொத்தம் 25 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சந்தோஷமாக வரும்போது பெற்றோருக்கும் மிகவும் நம்பிக்கை ஏற்படும்.

    தற்போது இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு
    • கன்னியாகுமரி போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்துஅவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மதுரை அருகே கோவில் பெண் ஊழியர் மாயமானார்.
    • புட்டுத்தோப்பு சிவன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் யுவலட்சுமி (23). புட்டுத்தோப்பு சிவன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி காலை யுவலட்சுமி, மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள கல்வி நிலையத்திற்கு படிக்க செல்வதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தந்தை செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் அருகே மின்சாரத்துறை பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 51). இவர் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார். அவரிடம் பணம் இல்லாததால், மகாலட்சுமி தொடர்ந்து பணம் கேட்டதற்காக தன்னுடைய சம்பள வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் லோன் எடுத்து மகாலட்சுமிக்கு வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கோடீஸ்வர ஆனந்த் பலமுறை மகாலட்சுமியிடம் தான் வழங்கிய 4 லட்சம் ரூபாய் பணத்தை வழங்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் மகாலட்சுமி பணம் தராமல் காலம் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோடீஸ்வர ஆனந்த் மீண்டும் பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என மகாலட்சுமி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன் என்று சரண் அடைந்த கணவன் பரபரப்பு தகவல் அளித்தார்.
    • ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், (வயது32), கொத்தனார். அவரது மனைவி ராஜலட்சுமி (வயது 25). ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். எனவே கணவன்-மனைவி கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை உருவானது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிப்போனது.

    அத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் நாகராஜ் சரணடைந்தார். கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து, கணவர் நாகராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை அவர் தெரிவித்தார். 

    ×