விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன்? சரண் அடைந்த கணவன் பரபரப்பு தகவல்

விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன் என்று சரண் அடைந்த கணவன் பரபரப்பு தகவல் அளித்தார்.ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன்? சரண் அடைந்த  கணவன் பரபரப்பு தகவல்
Published on

கடலுார்: 

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், (வயது32), கொத்தனார். அவரது மனைவி ராஜலட்சுமி (வயது 25). ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். எனவே கணவன்-மனைவி கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை உருவானது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிப்போனது.

அத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் நாகராஜ் சரணடைந்தார். கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து, கணவர் நாகராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை அவர் தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com