search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூம்பாறை"

    • தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    ×