search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்லட் 500 ஏ.பி.எஸ்."

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 500 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #RoyalEnfield #motorcycle

    இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் புல்லட் 500 மோட்டார்சைக்கிளை டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய புல்லட் 500 ஏ.பி.எஸ். விலை ரூ.1,86,961 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விலையை விட ரூ.14,000 அதிகம் ஆகும். இதுதவிர ஏ.பி.எஸ். வசதியில்லாத மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணப்படவில்லை.

    பாதுகாப்பு வசதி தவிர ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 499சிசி சிங்கிள் சிலிண்டர்  என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்தவரை புல்லட் 500 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது.

    புல்லட் 500 தவிர, ரெடிட்ச் 350 எடிஷன் மோட்டார்சைக்கிளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியது. கிளாசிக் 350 ரெடிட்ச் எடிஷன் மாடலின் விலை ரூ.1.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. #royalenfield

    ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். விலை ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் முன்பதிவு துவங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேக்ட்ரி-கஸ்டம் வெர்ஷன் ஸ்டான்டர்டு மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய மாடலின் ஃபியூயல் டேன்க், ஹேன்டில் பார், அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர் உள்ளிட்டவற்றில் பிராகசமான நிறங்கள் பூசப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். மாடலின் விலையை வைத்து பார்க்கும் போது, தன்டர்பேர்டு 500 எக்ஸ் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

    ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி தவிர, புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளிலும் 499சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள், இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் துவங்கி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் கிளாசிக் 350 சிக்னல்ஸ், கிளாசிக் 500, ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், தன்டர்பேர்டு 350 எக்ஸ் உள்ளிட்டவற்றில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி வருகிறது.
    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். வேரியன்ட் விநியோகம் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #RoyalEnfield

    ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களில் கிளாசிக் 500 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஏ.பி.எஸ். விலை ரூ.2.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டான்டர்டு கிளாசிக் 500 மாடலை விட ரூ.20,3000 முதல் ரூ.30,000 வரை அதிகம் ஆகும். நிறங்களுக்கு ஏற்ப கிளாசிக் 500 ஏ.பி.எஸ். விலை மாறுபடுகிறது.

    கிளாசிக் 500 மாடலில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் கொண்டிருக்கிறது. இதே யூனிட் கிளாசிக் சிக்னல்ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். எடிஷன்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹிமாலயன் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதிகம் ஆகும்.

    ஏ.பி.எஸ். தவிர கிளாசிக் 500 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட கிளாசிக் 500 மாடலில் 499சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு அனைத்து மாடல்களுக்கு வரும் மாதங்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படும் என்றும் விரைவில் தனது இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு மாடல்களும் சர்வதேச சந்தையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய 178 நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது. #RoyalEnfieldPegasus

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு சமீபத்தில் இதன் விற்பனை நடைபெற்றது. 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் என அழைக்கப்படும் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை துவங்கிய 178 நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது. ஆன்லைனில் நடைபெற்ற இந்த விற்பனை ஜூலை 10-ம் தேதி நடைபெற இருந்தது, எனினும் வலைதளம் முடங்கி போனதால் விற்பனை நிறுத்தப்பட்டது.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பாரா-ட்ரூப்பர்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காணரமாகவே முகற்கட்ட விற்பனை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    ஜூலை 25-ம் தேதி மாலை 4.00 மணிக்கு விற்பனை துவங்கிய நிலையில், விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 250 யூனிட்களும் 3 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்தது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் கிளாசிக் 500 பெகாசஸ் எடிஷன் விலை ரூ.2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிப்ணயம் செய்யப்பட்டது.

    லிமிட்டெட் எடிஷன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் ஃபியூயல் டேன்க்-இல் பெகாசஸ் லோகோ, ராணுவ தோற்றம் கொண்ட பை, பித்தளை பக்கிள்கள் கொண்ட லெதர் ஸ்டிராப், RE/WD 125 தோற்றம் கொண்ட டேன்க் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹேன்டிள்பார், ஹெட்லைட் பெசல், எக்சாஸ்ட் மஃப்ளர் இன்ஜின் மற்றும் ரிம்கள் முழுமையாக பிளாக்-டு அவுட் செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் ஆலிவ் டிராப் கிரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் பரவுன் நிற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பிரத்யேக குறியீட்டு எண் மாடலின் ஃபியூயல் டேன்க்-இல் அச்சடிக்கப்படும். 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலில் 499 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பிஹெச்பி பவர், 41.3 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. #RoyalEnfieldPegasus #motorcycle
    புழல் சிறை-2ல் மேலும் 500 கைதிகளை அடைப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #tnassembly #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிறைத் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.

    சென்னை புழல் மத்திய சிறை2ல் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    புழல் மத்திய சிறை 2, வேலூர், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் பணி புரிந்து வரும் உதவி சிறை அலுவலர்களுக்கு 50 குடியிருப்புகள், 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சிறைகளுக்குள் சிறைவாசிகள் செல்லிடத் தொலைபேசியை உபயோகப்படுத்துவதை தடுத்திடும் பொருட்டு, ஏற்கனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்தியசிறை1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் நடப்பாண்டில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் பொருத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்ந்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.

    ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

    தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46 ஆயிரத்து 397 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    நடப்பாண்டில் 860 அங்கன்வாடி மையக் கட்டடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய வகையிலான பழுதுகளை நீக்கி, சீர்படுத்துவதற்காக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 17 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச் செய்யவும், சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவும், அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அம்மா வழியில் அம்மாவின் அரசு செயல் பட்டு வருகின்றது.

    மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    இதன் மூலம் 1,129 சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க, அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். முதற் கட்டமாக, 100 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

    மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுகின்றனர்.

    அவர்களுக்கு தற்போது மாதமொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் 650 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #tnassembly #EdappadiPalaniswami

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 லிமிட்டெட் எடிஷன் பெகாசஸ் மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பெகாசஸ் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. முன்னதாக லண்டனில் அறிமுகம் செய்யப்பட்ட லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெறும் 250 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் RE/WD 125 மோட்டார்சைக்கிளை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. RE/WD 125 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

    லிமிட்டெட் எடிஷன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் ஃபியூயல் டேன்க்-இல் பெகாசஸ் லோகோ, ராணுவ தோற்றம் கொண்ட பை, பித்தளை பக்கிள்கள் கொண்ட லெதர் ஸ்டிராப், RE/WD 125 தோற்றம் கொண்ட டேன்க் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹேன்டிள்பார், ஹெட்லைட் பெசல், எக்சாஸ்ட் மஃப்ளர் இன்ஜின் மற்றும் ரிம்கள் முழுமையாக பிளாக்-டு அவுட் செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் ஆலிவ் டிராப் கிரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் பரவுன் நிற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பிரத்யேக குறியீட்டு எண் மாடலின் ஃபியூயல் டேன்க்-இல் அச்சடிக்கப்படும். 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலில் 499 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பிஹெச்பி பவர், 41.3 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிஷன் விலை ரூ.2.49 லட்சம் (ஆன்-ரோடு மகாராஷ்ட்ரா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பெகாசஸ் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் பெகாசஸ் 500 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. அதன் படி புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் மே 30-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் RE/WD 125 மோட்டார்சைக்கிளை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. RE/WD 125 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

    2-ஸ்டிரோக் மோட்டார்சைக்கிள் என்பதால் எடை குறைவாகவும், அவசர தகவல்களை பரப்புவோர் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் இருந்தது. இந்த மோட்டார்சைக்கிளை கடினமான சூழல்களில் ஓட்டமுடியாமல் போனால் மோட்டார்சைக்கிளை தோளின் மீது தூக்கிக் கொண்டு நடக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

    கிளாசிக் 500 பெகாசஸ் லிமிட்டெட் எடிஷன் மொத்தமாகவே 1000 யூனி்ட்களே மட்டுமே தயாரிக்கப்படுவதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவில் வெறும் 250 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லண்டனில் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை GBP 4,999 (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    லிமிட்டெட் எடிஷன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் ஃபியூயல் டேன்க்-இல் பெகாசஸ் லோகோ, ராணுவ தோற்றம் கொண்ட பை, பித்தளை பக்கிள்கள் கொண்ட லெதர் ஸ்டிராப், RE/WD 125 தோற்றம் கொண்ட டேன்க் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹேன்டிள்பார், ஹெட்லைட் பெசல், எக்சாஸ்ட் மஃப்ளர் இன்ஜின் மற்றும் ரிம்கள் முழுமையாக பிளாக்-டு அவுட் செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் ஆலிவ் டிராப் கிரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் பரவுன் நிற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பிரத்யேக குறியீட்டு எண் மாடலின் ஃபியூயல் டேன்க்-இல் அச்சடிக்கப்படும். 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலில் 499 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பிஹெச்பி பவர், 41.3 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பாரா-ட்ரூப்பர்களை சார்ந்து உருவாக்கப்பட்ட லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பாரா-ட்ரூப்பர்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் என அழைக்கப்படுகிறது. 

    ×