search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். விநியோகம் துவங்கியது
    X

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். விநியோகம் துவங்கியது

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். வேரியன்ட் விநியோகம் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #RoyalEnfield



    ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களில் கிளாசிக் 500 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஏ.பி.எஸ். விலை ரூ.2.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டான்டர்டு கிளாசிக் 500 மாடலை விட ரூ.20,3000 முதல் ரூ.30,000 வரை அதிகம் ஆகும். நிறங்களுக்கு ஏற்ப கிளாசிக் 500 ஏ.பி.எஸ். விலை மாறுபடுகிறது.

    கிளாசிக் 500 மாடலில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் கொண்டிருக்கிறது. இதே யூனிட் கிளாசிக் சிக்னல்ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். எடிஷன்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹிமாலயன் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதிகம் ஆகும்.



    ஏ.பி.எஸ். தவிர கிளாசிக் 500 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட கிளாசிக் 500 மாடலில் 499சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு அனைத்து மாடல்களுக்கு வரும் மாதங்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படும் என்றும் விரைவில் தனது இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு மாடல்களும் சர்வதேச சந்தையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×