search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகதிருவிழா"

    • நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
    • ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.

    தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

    நாளை காலை 10 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நீலகிரி முதலாவது புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    பப்பாசி குமரன் பதிப்பகத்தின் தலைவர் வயிரவன் அறிமுக உரையாற்றுகிறார். திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேச உள்ளார்.

    மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் நாட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-ந் தேதி எழுத்தாளர் இமயத்தின் வாழ்க்கைதான் இலக்கியம் சிறப்புரை, பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியும், பாபு நிஸாவின் கரோக்கி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

    7-ந் தேதி திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியின் சிறப்புரையும், பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமாரின் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதை குறித்து பேசுகிறார். இதுதவிர பெண்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவது குடும்ப பொறுப்பே, சமுதாய பொறுப்பே என்ற தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது.

    9-ந் தேதி வரலாற்று நாவல் ஆசிரியர் ஸ்ரீமதி வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் குறித்து பேசுகிறார். மணிஹட்டி சிவாவின் படுகா நடனமும் நடக்கிறது. 10-ந் தேதி சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பூனையும், பாற்கடலும் குறித்து பேசுகிறார்.

    தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித் தவர்கள் பங் கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    14-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    நாளை முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

    11 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, 1 மணிக்கு பட்டிமன்றங்கள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    • விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
    • பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை தேஜஸ் மஹாலில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி வழிகாட்டுதலுடன் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அறிவுரையின் பேரில் பள்ளி மாணவிகளை அழைத்துச் சென்று நூல் அரங்குகளை காண்பித்து பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ள நூல்களை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கிச் சென்றனர். வாசிப்பின் அவசியம் குறித்த அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களை வழி நடத்தி சென்ற பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
    • புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    திருச்சி :

    திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புத்தகச் சுவர் திறப்பு விழா மற்றும் திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களையும், நேசிக்கும் புதிய நூல்களையும், தாமாக முன்வந்து நன்கொடையாக கொண்டு வந்து வழங்கலாம். இங்கு சேகரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. காசு சேமித்து அதனைக் கொண்டு புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த, மண்பாண்டத்தால் செய்யப்பட்ட உண்டியல்களை, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அமைச்சர்கள் வழங்கினர்.

    மேலும், திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    இன்று முதல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்திலும், புத்தகத் திருவிழாவிற்கான விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் அபிராமி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,

    எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், நிர்வாகிகள் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச் செல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மூக்கன், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மற்றும் பந்தல் ராமு, மணிவண்ணன், திருப்பதி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×