search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவிகள்"

    • பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
    • பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.

    அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்

    பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

    அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
    • பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.

    இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

    பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர்.
    • தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

    கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அது ஒருவரை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தருவதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள் ஆவர்.

    உயர்ந்தவன் தாழ்ந்தவன், வசதி படைத்தவன் வசதி இல்லாதவன் என அவர்கள் எதையும் பார்க்காமல் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஒருவருக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுப்பதே ஆசிரியர்கள் தான் என்றே கூறலாம்.

    இதனால் ஒருவர் யாரை மறந்தாலும் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறப்பதில்லை. தாய்-தந்தை அடுத்தபடியாக ஆசிரியரை கூறுகிறார்கள். 2000-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களை தெய்வமாகவே மதித்தார்கள் என்று கூறலாம்.

    ஆசிரியர்களில் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, நல்லது-கெட்டது, எதிர்காலத்துக்கு அவசியமானது என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாரும் மறந்து விட முடியாது.

    நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முந்தைய காலக்கட்டங்களில் படித்தவர்கள், தற்போது நடத்தும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உடன் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, தங்களுக்கு கல்வியறிவை கொடுத்த ஆசிரியர்களை கவுரவிப்பதை காண முடிகிறது.

    ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர். தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

    அவர்களுக்கு தனது தாய்-தந்தைக்கு செய்வதைப் போன்று அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அப்படித்தான் கேரளாவில் கண் பார்வையற்ற ஒரு ஆசிரியருக்கு பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கு வருவதற்கு, வகுப்பறைக்கு செல்வதற்கு என அனைத்து இடங்களுக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று மாணவிகள் உதவி வருகிறார்கள்.

    கண் பார்வையற்ற ஆசிரியருக்கு உதவும் மாணவிகள் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி கருக்குட்டி எடக்கன்னு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது எட்டாவது வயதில் கண் பார்வையை முற்றிலும் இழந்தார்.

    கண் பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் வேலாயுதன். அவர் கோட்டயத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கண் பார்வையற்றோருக்கான பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

    பின்பு திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த அவர், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிறப்பாக படித்த அவர், ஆசிரியர் பணியில் சேருவதை இலக்காக நிர்ணயித்தார்.

    இதற்காக திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் பி.எட். படிப்பை முடித்தார். அதன் பிறகு வேலாயுதன் ஆசிரியர் பணிக்காக பல தனியார் பள்ளிகளின் கதவை தட்டினார்.

    ஆனால் யாரும் அவருக்கு வேலைகொடுக்க தயாராக இல்லை. இதனால் வேலாயுதன் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்க தொடங்கினார். 11 ஆண்டுகளாக லாட்டரி விற்கும் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

    அதன் பிறகு அட்டப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் எடுக்கும் வாய்ப்பு வேலாயுதனுக்கு கிடைத்தது. அங்கு சில நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய அவர் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உயர் நிலை ப்பள்ளி உதவியாளர் தரவரிசை பட்டியலில் வேலாயுதன் முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா முப்பத்தடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு சமூக அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

    அங்கமாலியில் தங்கி இருந்த அவர், முப்பத்தடம் அரசு பள்ளிக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் பயணித்து வர வேண்டி இருந்தது. பார்வையற்றவரான அவருக்கு அந்த பயணம் மிகவும் சவாலாக இருந்தது. இதனால் தனது ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணிபுரிய விரும்பினார்.

    அதற்கு தகுந்தாற் போல் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அவர் பணி மாறுதல் பெற்றார். கண் பார்வையற்றவராக இருந்தாலும் அவர் பாடம் எடுக்கும் முறை பெரும்பாவூர் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இதனால் மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் மாறிவிட்டார். கண் பார்வையற்ற அவருக்கு, தங்களின் தாய்-தந்தைக்கு செய்வது போன்று அனைத்து உதவிகளையும் செய்ய மாணவிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.

    தினமும் காலையில் தனது ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வரும் அவரை, பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி வரை மாணவிகள் கையை பிடித்து அழைத்து வருகிறார்கள். பின்பு மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று பஸ்சில் ஏறிச் செல்ல உதவுகிறார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளியில் இருக்கும்போது பணியாளர் அறையில் இருந்து வகுப்பறைக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று உதவி செய்கிறார்கள். கண் பார்வையில்லாத ஆசிரியர் வேலாயுதனுக்கு, அவரிடம் படிக்கும் மாணவிகளே கண்களாக இருந்து வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

    இது பற்றி ஆசிரியர் வேலாயுதன் கூறும்போது, குழந்தைகள் என்னிடம் ஈடு இணையற்ற அன்பை கொடுக்கிறார்கள் என்று கூறினார். ஆசிரியர் வேலாயுதன் பற்றி மாணவிகள் கூறும்போது, மிகவும் அமைதியானவர். நன்கு பாடம் எடுப்பார். பாட்டும் பாடுவார். இதனால் அவரை எங்களுக்கு பிடிக்கும் என்றனர்.

    பார்வையற்ற ஆசிரியருக்கு மாணவிகள் செய்யும் இந்த சேவையை அதே பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மட்டுமின்றி பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

    மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் உள்ளார். இதனால் அவரிடம் படிக்கும் மாணவிகள், கண் பார்வையில்லாத வேலாயுதனின் கண்களாக உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

    • குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பானாதுறை மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தியது.

    இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும், தடகள விளையாட்டுகளில் அனைத்து மாணவிகள் பிரிவில் 58 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    12 குழு விளையாட்டு களில் 7 குழு விளையாட்டு களில் பங்கு பெற்று, 12 பிரிவுகளில் முதல் இடமும், 3 பிரிவுகளிலும்2-ம் இட மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், உட ற்கல்வி இயக்குநர் ஜான்சி, உடற்கல்வி ஆசிரியைகள் ஜாஸ்மின் டயானா, ஜோஸ்பின் ரோசி, மோகன ப்பிரியா ஆகியோருக்கு தலைமையாசிரியை அருட். சகோதரி. வில்லியம் பிரௌன் பாராட்டினர்.

    • மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திருவள்ளூர் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து தினமும் பின்தொடர்ந்ததாக தெரிகிறது. இதனை மாணவி கண்டித்தும் கேட்கவில்லை.

    இதுபற்றி அந்த மாணவி உடன்படிக்கும் மற்ற தோழிகளிடம் கூறினார். அவர்களும் அந்த மாணவனை எச்சரித்தனர். ஆனாலும் மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் நின்ற அந்த மாணவனிடம் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தோழிகள் சேர்ந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே வந்து பதுங்கி நின்றார்.

    ஆனாலும் அவரை மாணவிகள் விரட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் எங்கும் தப்பி ஓட முடியாமல் மாட்டிக்கொண்ட மாணவனை, அனைத்து மாணவிகளும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மாணவிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து போகச்செய்தனர்.

    மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொல்லை கொடுத்த மாணவரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • மாணவிகள் இருவரும் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை.
    • தாயார் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர்

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே பள்ளி யில் படித்து வருகிறார்கள். தினமும் ஒன்றாக பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று மாணவிகள் இருவரும் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் மாணவிகள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் நேற்று பள்ளிக்கு வராதது தெரியவ ந்தது. இதனால் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் இதுதொ டர்பாக வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவிகளையும் தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவி ஒருவர் தனது தோழி ஒருவருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சேலத்தில் இருப்ப தாக கூறினார்.

    இந்த தகவல் மாயமான மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் உடனடியாக சேலம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மாயமான மாணவிகளின் புகைப்படத்தையும் அங்கு அனுப்பி வைத்தனர். சேலம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டனர். மாணவிகள் மீட்கப்பட்ட தகவல் பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி போலீசார் மற்றும் மாணவியின் உறவினர்கள் சேலத்துக்கு விரைந்தனர்.

    இன்று காலை சேலம் போலீஸ் நிலையத்தில் இருந்த மாணவிகளை பூதப்பாண்டி போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது தாயார் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை பூதப்பாண்டிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
    • இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் கைதிகளை எவ்வாறு நடத்துவது, காவல் நிலையத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்பாடுகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • போதை மயக்கத்தில் தடுமாறிய மூன்று மாணவிகளும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே போதை கலாச்சாரம் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து பெட்டிக்கடை முதல் பெரிய கடை வரை விற்பனை ஜரூராக நடந்து வந்தது. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

    இந்தநிலையில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதைபொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சமரசம் செய்தால் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி போதைபொருள் விற்பனையில் ஈடுபடுவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு அரங்குகள், பள்ளி வளாகங்களில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கரூரில் சீருடை அணிந்த பள்ளி மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் சர்ச் கார்னர் அருகே மூன்று பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மதுபோதையில் தன்னிலை அறியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கடைக்காரர்கள், ஏதோ உடல்நலக்குறைவால் இப்படி ஆகியிருக்கலாம் என்று நினைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சை கண்டதும் ஒரு மாணவி சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து நழுவி சென்று விட்டார். மற்ற ரெண்டு மாணவிகளால் நகர முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தபோதுதான் மாணவிகள் போதையில் திளைத்திருப்பது தெரிந்தது. பொதுமக்கள் ரெண்டு பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போதை மயக்கத்தில் தடுமாறிய அந்த மூன்று மாணவிகளும் கரூர் மாநகரிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். மூன்று பேரும் இணை பிரியா தோழிகளாகவும் இருந்தனர். அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மறுதேர்வு எழுதுவதற்காக சீருடையில் வேறொரு பள்ளிக்கு வந்துள்ளனர்.

    தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் வெளியில் வந்த அவர்கள் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஒயின் குடித்தால் மேலும் கலராக மாறலாம் என யாரோ சொன்ன தகவலை கேட்டு தெரிந்தவர்கள் மூலமாக டாஸ்மாக் கடையில் ஒயின் வாங்கி மூன்று பேரும் குடித்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் போதை தலைக்கேறி தடுமாறி இருக்கிறார்கள். தெரியாமல் குடித்து விட்டதாக அந்த மாணவிகள் போலீசாரிடம் அழுது புலம்பினர்.

    போதையில் சுதாரித்துக்கொண்டு ஆம்புலன்சில் ஏறாமல் டிமிக்கி கொடுத்து சென்றவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களின் பெற்றோரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே போதை கலாச்சாரம் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால் பெரும் ஆபத்தில் போய் முடியும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
    • அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து படிப்பை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் 11-ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமான மாணவிகளின் விவரங்களை சேகரித்து, அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு அதிகம் திருமணம் நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசுக்கும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.

    பண்டைய பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக பள்ளி மாணவிகள் குழுவாக நின்று பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த தென்னாப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஜோகன்ஸ்பர்க்:

    தென்னாப்பிரிக்காவில் ஹோசா என்ற இனக்குழு அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். இதனால், பல முக்கிய விவகாரங்களில் இந்த இனக்குழு தலைவர்களை அனுசரித்தே அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.

    பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவிகளின் அந்தர உறுப்புகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    இந்நிலையில், இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் என ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
    ×