கும்பகோணம் புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்றனர்.
சாதனை படைத்த கும்பகோணம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். 
சாதனை படைத்த கும்பகோணம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். 
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் பானாதுறை மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தியது.

இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும், தடகள விளையாட்டுகளில் அனைத்து மாணவிகள் பிரிவில் 58 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

12 குழு விளையாட்டு களில் 7 குழு விளையாட்டு களில் பங்கு பெற்று, 12 பிரிவுகளில் முதல் இடமும், 3 பிரிவுகளிலும்2-ம் இட மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், உட ற்கல்வி இயக்குநர் ஜான்சி, உடற்கல்வி ஆசிரியைகள் ஜாஸ்மின் டயானா, ஜோஸ்பின் ரோசி, மோகன ப்பிரியா ஆகியோருக்கு தலைமையாசிரியை அருட். சகோதரி. வில்லியம் பிரௌன் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com