search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி பிறந்தநாள்"

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்கம் மோதிரம் அணிவித்தார். #BJP #HappyBirthDayPM #HappyBdayPMModi
    சென்னை:

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை இன்று பா.ஜனதாவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கினார்கள்.

    ரத்ததான முகாம், மருத்துவமுகாம் உள்ளிட்ட சேவைப் பணிகளை செய்தார்கள். மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியடைய செய்யும் வகையில் இனிப்புகள் வழங்கி பொது மக்களை திரட்டி தெருக்களை சுத்தப்படுத்தும் பணியிலும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.

    மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன் புரசைவாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.


    அதன்படி இன்று அந்த ஆஸ்பத்திரியில் சந்தோஷ் குமார்-ஸ்ரீதுர்கா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் அங்கிருந்த 15 குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார்.

    திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு கோலப் போட்டிக்கு தொகுதி தலைவர் திருப்புகழ் ஏற்பாடு செய்து இருந்தார். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் கோலம் போட்டு இருந்தனர். சிறந்த கோலங்களுக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் பரிசு வழங்குகிறார்.#BJP #HappyBirthDayPM #HappyBdayPMModi
    இனிவரும் காலங்களில் இந்தியா சாதனைகள் பல படைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றும் துணையாக இருப்போம் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #HappyBirthDayPM #PonRadhakrishnan #BJP
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌ஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் தோன்றி பிரதமராக பொறுப்பெடுத்து, 4 ஆண்டுகளுக்குள்ளாக உலகின் முதல்நிலை நாடாக இந்தியா உருவாக வழிநடத்தி, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் வெற்றி முழங்கச் செய்து அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறுகிறது என்று ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து முழங்கவைத்து, உலக நாடுகள் இந்தியாவை வணங்கி வலம்வர வைத்த பிரதமர் நரேந்திரமோடி 68-வது பிறந்த நன்நாளில் (இன்று) அவருக்கு நீண்ட ஆயுளை, நிறைந்த பலத்தையும் அன்னை சக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


    இனிவரும் காலங்களில் இந்தியா சாதனைகள் பல படைக்க பிரதமர் நரேந்திர மோடி என்றும் வெற்றிபெறவும், சாதி, மத, மொழி, அரசியல் பாகுபாடு கடந்து ஒவ்வொரு இந்தியனும் துணையாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #HappyBdayPMModi #HappyBirthDayPM #PonRadhakrishnan #BJP
    ×