search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்ரம்"

    • ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகின்றன.

    சத்திய சாய் மாவட்டம், புட்டபர்த்தி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குட்டகுண்ட ஸ்ரீதர் ரெட்டி நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் அனில் குமார் என்பவர் மேளம் அடித்தபடி கட்சிப் பாடல்களை பாடினார்.

    கொத்த செருவு பி.சி காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அரசு அரசு ஊழியராக வேலை செய்யும் தன்னார்வலர் ஹர்ஷத் என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் துண்டை தோலில் அணிந்து கொண்டு தன்னிலை மறந்து விசில் அடித்தபடி நடனம் ஆடினார்.


     



    ஷர்ஷத் தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து நடனம் ஆடுவதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    இந்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து நடனமாடிய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆந்திராவில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் 11 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 

    ×