search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார பாடல்"

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    ×