search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாதம்"

    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது
    • 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட் டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற் றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை அமைந்து உள்ளது.

    இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்துஉள்ளது. இந்த கோவிலில் ஆனிமாத பிரதோஷ ம்நேற்று மாலை நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்குநந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ் வரருக்கும் சிறப்பு அபிஷே கம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட் டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ம்செய்தனர்.

    பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகை யான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
    • மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி படைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேர்ந்த ங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.

    திங்கட்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை எனப்படும் குதிரைக்கு பூஜை, ஒட்டக பூஜை, கன்னிப்பெண்களுக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி ஸ்ரீ படைவெட்டி மாரியம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன வள்ளலார் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
    • என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கொடை விழா நிகழ்ச்சியில் நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பக்திகானமும், 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தீப லெஷ்மி பூஜையும், புண்ணியாக வாசனம் பூஜையும், பஞ்கவ்ய பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், 12.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள் காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8. 15 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு குடியழைப்பு பூஜையும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் 10-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பக்தி கானமும், 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 2 மணிக்கு அன்னதானமும்,

    மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு பூஜையும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
    பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், நைவேத்தியப் பொருட்களைத் தான் வழங்குவார்கள். ஆனால் ஒரு கோவிலில் தங்கம் வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

    ஆம்.. அத்தகைய பெருமைக்குரிய ஆலயம் மத்திய பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பெயர் ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயரைக் கொண்ட திருத்தலம். இங்குள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் வறுமையை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் யாரும் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அப்படி வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக அனைத்து கோவில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    இது இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது என்கிறார்கள். 
    ×