search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்தளை பொருட்கள்"

    • பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
    • அறைகளில் இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.

    நெல்லை:

    பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள மாறன்குளம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் செல்லப்பா. இவரது மகள் பாப்பா(வயது 36). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். பீரோவில் பணம் இருக்கிறதா என்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்குள்ள அறைகளில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களை திருடிச்சென்றார்.

    இதுகுறித்து பாப்பா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து.
    • அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் புதிய காலனி, பழைய காலனியில் உளள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து. இந்த இணைப்புகள் அனைத்தும் அவரவர் வீடுகளின் வாசலில் இருக்கும்.

    இந்நிலையில், இன்று காலையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது அனைத்து வீடுகளில் இருந்த குழாய்களில் இருந்து நீர் வெளியானது. இதனால் குழாய் அருகில் சென்று பார்த்த போது குடிநீர் குழாய் இணைப்பில் போடப்பட்டிருந்த பித்தளை கானை காணவில்லை. இதனை அக்கம் பக்க வீட்டில் இருந்தவர்களிடம் கூறும் போது, அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது. குடிநீர் குழாயில் இருந்த பித்தளை கான்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோடங்குடி கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகில் ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பித்தளை பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா வில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் திருட்டில் ஈடு பட்டவர்கள் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(31), பிள்ளையார்குளத்தை சேர்ந்த ராம் கார்த்திக்(30), ஆலங்குளம் காந்திநகரை சேர்ந்த பிரபாகரன்(33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×