search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே 300 வீடுகளின் குடிநீர் குழாயிலிருந்த பித்தளை பொருட்கள் திருட்டு
    X

    திட்டக்குடி அருகே 300 வீடுகளின் குடிநீர் குழாயிலிருந்த பித்தளை பொருட்கள் திருட்டு

    • குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து.
    • அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் புதிய காலனி, பழைய காலனியில் உளள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து. இந்த இணைப்புகள் அனைத்தும் அவரவர் வீடுகளின் வாசலில் இருக்கும்.

    இந்நிலையில், இன்று காலையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது அனைத்து வீடுகளில் இருந்த குழாய்களில் இருந்து நீர் வெளியானது. இதனால் குழாய் அருகில் சென்று பார்த்த போது குடிநீர் குழாய் இணைப்பில் போடப்பட்டிருந்த பித்தளை கானை காணவில்லை. இதனை அக்கம் பக்க வீட்டில் இருந்தவர்களிடம் கூறும் போது, அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது. குடிநீர் குழாயில் இருந்த பித்தளை கான்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோடங்குடி கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகில் ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×