search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரம்பரிய நெல்"

    • பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் பவானி அரசு விதைப்பண்ணையில் சென்ற ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டக்கூறு களில் ஒன்றான நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி விதைகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.25 வீதம் ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பாரம்பரிய நெல் பயன்பாடு நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதுடன் இவ்வாறான ரகங்கள் அனைத்து விதமான மண் வளத்திலும், பாதகமான வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கி வளரக்கூடிய திறன் படைத்ததாகவும் உள்ளது.

    மேலும் இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது. கால்நடைகள் பாரம்பரிய நெல் ரகத்தின் வைக்கோலை விரும்பி உட்கொள்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கோபிசெட்டி பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் டி.என்.பாளையம் தவிர மற்ற வட்டாரங்களில் குறைந்த அளவே மொத்தம் 1314 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது.

    எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.வெங்கடேசகன் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய நெல் விதைகளை விநியோகிக்க நெல் விதை பரிமாற்றத் திருவிழா உதவியது.
    • பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000.

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால் இழந்துள்ளனர். இந்த வகை விதைகளின் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் சூழலியல் குணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டின் சுமார் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மீட்டெடுக்கப் பட்டுள்ளதுடன், சமுதாய விதை வங்கிகள் மூலம் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 


    அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து இந்த சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர்.

    பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்பட்டது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் முன்முயற்சி திட்டத்தின் ஆதரவுடன் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு புத்துயிர் அளித்து, பாதுகாத்து, வகைப்படுத்துகிறது.

    திருவாரூரில் உள்ள CREATE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நெல் விதை பரிமாற்றத் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான கருப்பு கவுனி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை மற்றும் பலவற்றை விநியோகிக்க உதவியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து.
    • விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1525 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார்.

    தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்

    1525 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார் பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்இ ப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×