search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானிய விலையில்"

    • பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் பவானி அரசு விதைப்பண்ணையில் சென்ற ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டக்கூறு களில் ஒன்றான நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி விதைகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.25 வீதம் ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பாரம்பரிய நெல் பயன்பாடு நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதுடன் இவ்வாறான ரகங்கள் அனைத்து விதமான மண் வளத்திலும், பாதகமான வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கி வளரக்கூடிய திறன் படைத்ததாகவும் உள்ளது.

    மேலும் இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது. கால்நடைகள் பாரம்பரிய நெல் ரகத்தின் வைக்கோலை விரும்பி உட்கொள்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கோபிசெட்டி பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் டி.என்.பாளையம் தவிர மற்ற வட்டாரங்களில் குறைந்த அளவே மொத்தம் 1314 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது.

    எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.வெங்கடேசகன் தெரிவித்துள்ளார்.

    • பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
    • தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

    குண்டடம்

    குண்டடம் வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ச.சசிகலா தெரிவித்துள்ளதாவது:-

    நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக 5 வகையான பழமரச் செடிகளான மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி மற்றும் எலுமிச்சை போன்றவை அடங்கிய தொகுப்பானது 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.200, மானிய விலையில் ரூ.50-க்கு 5 வகை பழ மர செடிகள் அடங்கிய தொகுப்பினை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

    கிராமம் ஒன்றிற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மூலமாக 176 எண்களும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்களும் வழங்கப்படும். 2023- 24 நிதியாண்டில் குண்டடம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான பெரியகுமாரபாளையம், கண்ணாங்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் பெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 80 சதவீத தொகுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீத தொகுப்புகளை மற்ற கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கும் இத்தகைய பழமரச்செடிகளை அனைவரும் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது விபரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ரத்தின பாரதி 9488928722, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமூர்த்தி 9750327875, மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் அபிராமி 6385536512 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • நெற்பயிருக்கு தேவைப்படும் உரம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    விவசாயிகள் தற்போ தைய சம்பா பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றி அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் கனிமொழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கிய காரணிகளாக அமைகிறது. எனவே நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    தற்போதைய சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) நெல் ரகங்களான கோ 52, ஐ.ஆர். 20, ஏடீடி 38, ஏடீடி 54, பிபிடி 5204, வுசுலு 3, தூயமல்லிஆகிய நெல் ரகங்களே இப்பருவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை களும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண்மை எந்திர மயமாக்குதலின் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நடப்பு நிதி யாண்டில் ஈரோடு மாவட்ட த்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவின ருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டில் 42 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்த ப்பட உள்ளது. அதன்படி அம்மாபேட்டை வட்டா ரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூர் வட்டாரத்தில், கெட்டி சமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூர், பவானி சாகர் வட்டாரத்தில் மாதம் பாளையம், நொச்சிகுட்டை, புங்கார்.

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் நாகதேவம் பாளையம், பெருந்தலையூர், குள்ளம்பாளையம், பாரியூர், நம்பியூர் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூர், தாழ்குனி, சத்திய மங்கலம் வட்டாரத்தில் குமாராபாளையம், இக்கரை நகமம், புதுப்பீர்கடவூர். டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளை யம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்த ப்படுகிறது.

    ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடு முடி வட்டாரத்தில் அஞ்சூர், நஞ்சை கொளாநல்லி. மொ டக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூர், விள க்கேத்தி, பெருந்துரை வட்டாரத்தில் சிங்காநல்லூர், கருக்குபாளையம், பாப்ப ம்பாளையம், பெரிய வில்லாமலை, பொலவ நாயக்கன்பாளையம், பெரிய வீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வாகி உள்ளது.

    இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானி யத்தில் பவர்டில்லர் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல விப ரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளா ண்மை ப்பொறியியல்துறை, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப ங்களை உடனடியாக அலு வலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என கலெ க்டர் ராஜகோபால் சுங்கார கேட்டு க்கொண்டுள்ளார்.

    • பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
    • சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள லாம் என தமிழக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
    • இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    ஈரோடு, 

    வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

    ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.

    எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.

    எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள் நாமக்கல் வட்டார ஒருங்கி ணைந்த வேளாண்மை விரி வாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    இந்த விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் சாகு படிக்கு தேவையான விதையை, மானிய விலை யில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கொளத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை துறை துணை இயக்குனர் சீனிவாசன் கொளத்தூர் வட்டாரத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பயிர் வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாசிப்பருப்பு 64 ஹெக்டேரிலும், உளுந்து 6 ஹெக்டேரிலும் பயிர் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் கொளத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் அல்லது உதவி விதை அலுவலர் செந்தில்வேலன் ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்கள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. எனவே, நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அம்மா பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கனிமொழி கூறியதாவது:

    தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக கோ 52, சி.ஆர் – 1009 சப் 1, ஐ.ஆர். 20, ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, பி.பி.டி – 5204, சம்பா சப் – 1, டி.ஆர்.ஒய் – 3 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

    இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணு யிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    ×