என் மலர்
நீங்கள் தேடியது "Distribution of seed paddy at"
- விவசாயிகள் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- நெற்பயிருக்கு தேவைப்படும் உரம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
விவசாயிகள் தற்போ தைய சம்பா பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றி அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் கனிமொழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கிய காரணிகளாக அமைகிறது. எனவே நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
தற்போதைய சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) நெல் ரகங்களான கோ 52, ஐ.ஆர். 20, ஏடீடி 38, ஏடீடி 54, பிபிடி 5204, வுசுலு 3, தூயமல்லிஆகிய நெல் ரகங்களே இப்பருவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை களும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






