கபிலர்மலை வட்டார விவசாயிகள் பயறுவகைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ள அழைப்பு

பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
கபிலர்மலை வட்டார விவசாயிகள் பயறுவகைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ள அழைப்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள லாம் என தமிழக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com