search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பானி புயல்"

    பானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #FaniStorm #PMModi
    புதுடெல்லி:

    தென்கிழக்கு வங்கக்கடலில் ‘பானி’ புயல் நிலைகொண்டு உள்ளது. இது தீவிர புயலாக இன்று வலுப்பெறக்கூடும்.

    இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வந்து பின்னர் திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    பானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ‘பானி புயல் தொடர்பான நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்துவிதமான உதவிகள் அளிப்பது தொடர்பாக கேட்டறிந்தேன். பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை கண்காணித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    அனைவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்’

    இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். #FaniStorm #PMModi


    ‘பானி’ புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்ல செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். #FaniStorm
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து கடந்த சனிக்கிழமை புயலாக மாறியது.

    இது தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய இந்திய கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மற்றும் மே 1-ந்தேதியில் வட தமிழகம் - தென் ஆந்திரா கடற்கரைக்கு அருகில் வந்து அதன் பின்னர் திசை மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    பானி புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், திரிகோண மலைக்கு 620 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 1050 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அதன் பிறகு திசை மாறி வடகிழக்கு திசையில் நகரக்கூடும். மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து பகல் 12 மணிக்கு தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை. இதனால் நேரடி பாதிப்பு இல்லை.



    இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த புயல் தற்போது 880 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது வட தமிழகத்திற்கு 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து திசை மாறி செல்லக்கூடிய நிலை உள்ளதால் வடக்கு, வடமேற்கு திசை காற்று வீசி, வெப்ப நிலை உயரலாம்.

    புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்ல செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். #FaniStorm

    வங்கக் கடலில் உருவான பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்தது. 

    இந்நிலையில்,  சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை.

    வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும். பானி புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். #CycloneFani #Fani #TNRains
    வங்கக் கடலில் உருவான பானி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் தெரிகிறது. பானி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains 
    வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகும் என்றும், 30ம் தேதி தமிழகத்தை நெருங்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    புதுடெல்லி:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த நகர்வைப் பொருத்து, எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தெரிவிக்கும்.

    இந்நிலையில், இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்றும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

    “சென்னைக்கு தென்கிழக்கில் 1210 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயல் வரும் 30-ம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும். புயல் கரையை நெருங்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    ×