search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பானி புயல்"

    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவமாடிய பானி புயலுக்கு வீட்டை பறிகொடுத்த தலித் தொழிலாளி தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்த 3-ம் தேதி துவம்சம் செய்த பானி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கேன்டிரப்பாரா மாவட்டத்தில் புயலின் தாக்கத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, கரைந்து சாய்ந்து, தரைமட்டமாகின.

    இப்படி வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்பவர்களில் ரகுதெய்ப்பூர் கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான கிரோட் ஜேனா(58) என்பவரும் ஒருவர். வசித்துவந்த வீடு மண்மேடாகிப்போன நிலையில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டித்தரப்பட்ட கழிப்பறையில் சுமார் 15 நாட்களாக இவர் வாழ்ந்து வருகிறார்.

    6 அடி அகலம் 7 அடி நீளம் கொண்ட இந்த கழிப்பறையை தனது வசிப்பிடமாக மாற்றி தனது மனைவி மற்றும் பருவமடைந்த இருமகள்களுடன் குடும்பம் நடத்திவரும் இவர் கழிப்பிடமே வசிப்பிடமாக மாறிப்போனதால் அருகாமையில் உள்ள திறந்தவெளிகளை கழிப்படத் தேவைக்காக நாங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

    ’எனக்கு வேறு வசதி இல்லாததால் அரசு தரும் நிவாரணத்தொகையை வைத்துதான் வேறு வீடு கட்ட வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல் மந்திரி பிஜு பட்நாயக் பெயரிலான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கல்வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இந்த திட்டங்களின் மூலம் எனக்கு நிலையான வீடு அமைந்திருக்குமானால் என் வீட்டை இழந்து இப்படி கழிப்பறைக்குள் சமைத்து சாப்பிடும் துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு வாழ வேண்டி இருக்குமோ?’ என்று வேதனையுடன் கூறுகிறார், கிரோட் ஜேனா.

    கிரோட் ஜேனாவின் நிலைமை பற்றி தெரியவந்ததும் அவருக்கு ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர தேவையான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டு வருவதாக கேன்டிரப்பாரா மாவட்ட கிராமப்புற மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் திலிப் குமார் பாரிடா தெரிவித்துள்ளார்.
    புவனேஸ்வர் மாவட்டம் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ந்தேதி கரையை கடந்த பானி புயல் அம்மாநிலத்தை புரட்டிப் போட்டது.

    புவனேஸ்வர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்திய புயலால் விமான சேவைகளும், பாதிக்கப்பட்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் ரோஜலின் பிரேதன் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.

    புயலால் ரேடியோ நிலையத்தின் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையிலும், அவர் அச்சப்படாமல் வேலை செய்தார். புயல் கரையை கடப்பதற்கு முதல் நாள் ரோஜலின் இரவு நேர பணியில் இருந்தார். மறுநாள் காலை பணி முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் அந்த ரேடியோ நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் யாரும் அன்று வேலைக்கு வரவில்லை.

    காலை 9 மணிக்கு புயல் தாக்கிய வேளையில் தனி ஆளாக பணிபுரிந்த ரோஜலின் பேரிடர் குறித்த தகவல்களை மக்களுக்கு கூறியதாக ரேடியோ நிலைய அதிபர் ஷா அன்சாரி கூறினார்.


    இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வெளிவந்த புயல் குறித்த தகவல்களை இன்டர்நெட்டில் பார்த்து கிராம மக்களுக்கு காலை 9.30 மணிவரை தெரிவித்துள்ளார். அப்போது வரை அங்கு இன்டர்நெட் சேவை இருந்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் புயல் பாதிப்பு அதிகமானதால் இன்டர் நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

    ரோஜலின் கூறிய தகவல்களால் 100 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தப்பித்துள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார். புயல் நேரத்திலும் கடமை தவறாமல் துணிச்சலாக பணியாற்றிய ரோஜலினுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.


    அதன்படி இன்று (13-ந் தேதி) ரூ. 10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பானி புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான ஒடிசா மாநிலத்தில் புயலின் தாக்கத்தினால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

    நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு  மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், புவனேஸ்வரில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் சாய்த்துவிட்டது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ம் தேதி பானி புயல் தாக்கியது. புயலின் வேகம் மற்றும் புயல் கரை கடக்கும் பகுதிகளை முன்கூட்டியே கணித்து வானிலை மையம் எச்சரித்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் புயல் கரை கடந்தபோது, பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

    ஆனால், அசுர வேகத்தில் வீசிய காற்று கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் புவனேஸ்வரில் மட்டும் பச்சைப் பசேல் என வளர்ந்து, தூய காற்றை வழங்கி வந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. நகரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன. 

    20 வருடங்களுக்கும் மேலாக பராமரித்து வளர்த்த மரங்களுடன் கொண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு, இப்போது சுக்கு நூறாக நொறுங்கிப்போய் உள்ளது. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை வளர்த்து, அவற்றின் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தை பெறுவதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும். சாலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. 

    இதுபற்றி வனத்துறை அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், “சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மரங்களை எங்கள் குழந்தைகள் போன்று வளர்த்து பராமரித்தோம். புயலால் கிளைகள் முறிந்து சேதமடைந்த மரங்களை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 40 பேர் கொண்ட எங்கள் குழுவினர், கடந்த 4 நாட்களில் மட்டும் 800 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். புயலில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை இப்போது மதிப்பிட இயலாது. ஒட்டுமொத்த பசுமையும் அழிந்துவிட்டது” என்றார். 
    புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் மந்திரி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு அம்மாநில ஐஏஎஸ்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் மந்திரி நிவாரண நிதியில் அளிக்க உள்ளோம் என ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #CycloneFani
    புவனேஸ்வர்: 

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.  அப்போது 175 முதல் 230 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.  வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    இதற்கிடையே, பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், பானி புயல் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 41 ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Fanitoll #CycloneFani
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு கேரளா அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. #CycloneFani #AdaniGroup
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.



    அதானி குழுமம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல்வேறு சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #CycloneFani #AdaniGroup
    பானி புயல் நாளை காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FaniStorm
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ‘பானி’ புயல் அதிதீவிர புயலாக இன்று காலையில் வலுப்பெற்றது.

    சென்னையில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவிலும் மசூதிப்பட்டினத்தில் இருந்து சுமார் 750 கி.மீ. தொலைவிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

    இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. பானி புயல் 1-ந்தேதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதன் காரணமாக சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை அதிகாரி கூறியதாவது:

    பானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FaniStorm
    பானி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #CycloneFani
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு  4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.   #CycloneFani
    ×