search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 10 crore"

    நாங்குநேரியில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட தொகுதி.

    இங்குள்ள மக்கள், மருத்துவ தேவைக்காக, நாங்குநேரியில் உள்ள சிறிய அளவிலான அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகிறார்கள். நவீன மருத்துவ வசதிகள் கொண்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், 30 கிலோ மீட்டர் தொலைவு உள்ள பாளையங்கோட்டை செல்ல வேண்டும்.

    அதனால், நாங்குநேரியில் உள்ள சிறிய அளவிலான அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், சட்டசபையிலும், முதல்வரிடமும் தொடர்ச்சி யாக இதை வலியுறுத்தியதை அடுத்து, நாங்குநேரி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதற்கான அரசாணையும் அண்மையில் வெளியிட ப்பட்டது.

    ஆனால், தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வில், தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நாங்கு நேரியில் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.

    இன்னொருபுறம், தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனும், சட்டமன்றத்திலும், முதல்வரிடம் நேரடியாகவும் நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில், இன்று காலையில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நாங்குநேரி பொதுமக்கள் சிலர், சென்னையில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து, நாங்குநேரியில், அரசு ஏற்கனவே அறிவித்த மாவட்ட தலைமை மருத்துவ மனையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    நாங்குநேரியில் அமைய உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான வேலைகள் படிப்படியாக நடைபெறும் என்றும், முதல்கட்டமாக ரூ.10 கோடி  ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியளித்தார்.


    சுகாதாரத்துறை செயலாளரையும் அப்போது தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், நாங்குநேரியில் தலைமை மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும், தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை உடனே கையகப்படுத்தி, அதற்கான உத்தரவை அனுப்புமாறு, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், நாங்குநேரியில் தலைமை மருத்துவமனை அமைய தொடர் நடவடிக்கைகள் எடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கும் நாங்குநேரி மக்கள் நன்றி தெரிவித்தார்கள்.

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, நகர செயலாளர் வானமாமலை, நாங்குநேரி தாலுகா வளர்ச்சி கமிட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன், ரமேஷ், அய்யப்பன், பார்வதிநாதன், வார்டு செயலாளர் சுந்தர்,  தி.மு.க. பேரூர் நகர துணை செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னதுரை உள்ளிட்டோர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பேசினார்கள்.
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு கேரளா அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    ×