search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி எண்ணிக்கை அதிகரிப்பு"

    அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. #AssamRain
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் உள்ள தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 20000 பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பிரமபுத்திரா மற்றும் கோலாகட் ஆறுகளில் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல் ஏக்கர் கணக்கிலான் பயிர்கள் 
    கடும் நாசமடைந்துள்ளன.

    கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AssamRain
    ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. #Japanfloods
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

    தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Japanfloods 
    ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rainhitsJapan
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். வீடுகள் மூழ்கியதால் மக்கள் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் ராணுவ படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படு மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



    இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக பலவேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களை பலி வாங்கி வருகிறது.



    இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #rainhitsJapan
    ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. #JapanRains
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

    மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

    தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 20க்கு மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #rainhitsJapan
    கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatWave
    டொரண்டோ:

    கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

    மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.

    மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கு வெயிலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #HeatWave
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.#Nangarharsuicidebombing
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். #Nangarharsuicidebombing
    ×