search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide bomb attack"

    • ஆப்கானிஸ்தான் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இதில் 46 மாணவிகளும் அடங்குவர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியைட் பகுதியில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக கருதப்படும் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர்கள் ஹசாரா சமூகத்தை குறி வைத்து தாக்குல் நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது ஷியைட் பகுதியில் வாழும் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர், அவரது டிரைவர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். #ImranKhan #Tehreek-e-Insaf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாணங்களில் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கண்டாபூர் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இதில் கண்டாபூர் படுகாயம் அடைந்தார். அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியாகினர். படுகாயம் அடைந்த கண்டாபூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்டாபூர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தற்கொலைப்படை தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ImranKhan #Tehreek-e-Insaf
    ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த தாக்குதலில் பலியான சீக்கியர்களின் உறவினர்கள் இன்று வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். #Nangarharsuicidebombing #SushmaSwaraj
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட மொத்தம் 19 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

    இதற்கிடையே, சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது என காபுலில் உள்ள இந்திய தூதரகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த தாக்குதலில் பலியான சீக்கியர்களின் உறவினர்கள் இன்று வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இந்தியா சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

    ஆப்கனில் நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Nangarharsuicidebombing #SushmaSwaraj
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #Nangarharsuicidebombing
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர் எனவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என காபுலில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

    ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Nangarharsuicidebombing
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.#Nangarharsuicidebombing
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். #Nangarharsuicidebombing
    ×