search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan tehreek-e-Insaf"

    • புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
    • கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இம்ரான்கான் அறிவித்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவராக உள்ளார். அவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. பதவி விலகிய அவர்மீது இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பிரதமராக இருந்தபோது பரிசுப்பொருள் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியின் சின்னமான 'கிரிக்கெட் மட்டை' சின்னத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள 20 நாளுக்குள் புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சித் தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.

    கடந்த திங்களன்று நடைபெற்ற கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமானவரான பாரிஸ்டர் கோஹர் கான் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ராணுவ தளங்களை சேதப்படுத்தினர்.
    • ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக மந்திரி கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறி உள்ளார்.

    இம்ரான் கான் கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை அவரது கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக கூறினார்.

    'ராணுவ நிலைகளை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அந்த கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்ரான் கான், ராணுவத்தை தனது எதிரியாக கருதுகிறார். அவரது முழு அரசியலும் ராணுவத்தின் ஆதரவுடன் நடந்ததால், இன்று திடீரென ராணுவத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுக்க முடிவு செய்துள்ளார்' என பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர், அவரது டிரைவர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். #ImranKhan #Tehreek-e-Insaf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாணங்களில் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கண்டாபூர் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இதில் கண்டாபூர் படுகாயம் அடைந்தார். அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியாகினர். படுகாயம் அடைந்த கண்டாபூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்டாபூர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தற்கொலைப்படை தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ImranKhan #Tehreek-e-Insaf
    ×