search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரதநாட்டியம்"

    • 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தொடர்ந்து 20-வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி - நாட்டிய நிகழ்ச்சி நாளை ( சனிக்கிழமை ) தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவினை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது.

    முதல் நாளான நாளை மாலை 6 மணி முதல் 19-ம் தேதி அதிகாலை 6 மணி வரை இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது சிறப்புக்குரியதாகும்.

    இவ்வாண்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடு களில் இருந்து 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் வதோதரா ரமேஷ் குபேர்நாத் தாஞ்சுர்கார், பெங்களூர் மிதுன் ஷியாம், அபர்ணா வினோத், சென்னை முனைவர் ஸ்வர்ணமால்யா, சித்ரா முரளிதரன், சிந்து ஷியாம், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், மைசூர் ஸ்ரீவித்யா ராவ், அகமதாபாத் ஸ்மிதா சாஸ்திரி, ஹைதராபாத் ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், முனைவர் விஜயபால் பல்ஹோத், ஒடிசா லக்கி மோஹன்த்தி, புதுதில்லி சாந்தனு சக்ரபோர்த்தி, காக்கிநாடா முனைவர் கிருஷ்ணகுமார், கோழிக்கோடு முனைவர் சுகந்திபாரதி சிவாஜி, உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சார்ந்த கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    பிரகன் நாட்டியாஞ்சலி 2023 விழா ஏற்பாடுகளை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்.

    இவ்விழாவில் திரளான பக்தர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வினை கண்டுகளித்து சிறப்பிக்க வேண்டுமாறு பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் மற்றும் கவுரவ செயலாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்கவர் நடனமாடினர்.
    • நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.

    சென்னை வில்லிவாக்கத்தில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 4 வயது முதல் ஏராளமான மாணவிகள் பரத நாட்டியம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இப்பள்ளியின் 10ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் (5-2-2023) நடைபெற்றது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதீய வித்யாபவன் உள் அரங்கில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியின் இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவியும், நடன ஆசிரியருமான நந்திதா ஆகியோரின் ஏற்பாட்டில் 10ம் ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு கருப்பொருளின் கீழ் கண்கவர் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 9 மாணவிகளின் சலங்கை பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும், நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சிங்காரம்பிள்ளை பள்ளியின் தாளாளர் கைலாஷ், திரைப்பட டப்பிங் கலைஞர் கோதண்டம் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    பின்னர், நடனம் ஆடிய மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    • சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா பல்லடம் பொன்காளியம்மன் கோவில் வளாகத்தில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் பங்கேற்ற அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சுபிக்‌ஷா மகாலில் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் ஸ்ரீ வாசவி மகிளா சமாஜம் சார்பில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே சுபிக்‌ஷா மகாலில் நாளை(செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு வள்ளி, 8.55 மணிக்கு தேவசேனா சமேதராக சுப்பிரமணியசாமி மண்டபத்துக்கு எழுந்தருளல், புண்யாக வாசனம், ரக்‌ஷாபந்தனம், பாலிகை சங்கல்பம், சுப்பிரமணியர் கன்யாதானம், கன்யகாதானம், மாங்கலிய பூஜை ஆகியவை நடக்கின்றன. பின்னர் மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பரதநாட்டியம், அக்சதை ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி போன்றவையும் நடக்கின்றன.

    • ஏழை மாணவிகளுக்கு ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
    • சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதி ஊராட்சி பகுதியில் ஏழை மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். இதையறிந்த திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவிகளுக்கு சலங்கைகள் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.

    இதன்படி சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை தலைவர் இந்திரா சுந்தரம், துடுப்பதி ஊராட்சி தலைவர் அன்பரசு முன்னிலையில் 10 மாணவிகளுக்கு சலங்கைகளை இலவசமாக வழங்கினார். இதில் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருபவரிடம் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இங்குள்ள பிரதான 15 கோவில்களில் பரதநாட்டியமாடி சாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    சுவாமிமலை:

    கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியை சேர்ந்தவர் சுஷ்மாரெட்டி. இவர் அங்கு இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருகின்றார். அவரிடம், சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பரதம் பயின்ற மாணவிகள் இக்கலை உருவான தமிழகத்துக்கு வந்து, இங்குள்ள பிரதான 15 கோயில்களில் பரதநாட்டியம் நடனமாடி, சுவாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த பரதநாட்டிய பேராசிரியர் ஷெல்லா தலைமையில், சுஷ்மாரெட்டி இவருடைய மாணவிகளான பிரியா, இவருடைய மகள் பூமி, ஜான்வி, கேத்திரி, பவானி, சக்ஸரா, வைஷ்ணவி, பவன் ஆகிய 8 பேர் கடந்த 22-ம் தேதி தமிழகத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள், தாராசுரம், சுவாமிமலை, புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட 8 கோயில்களில் நடனமாடியுள்ளனர்.

    தொடர்ந்து கிராமப்புறத்தை சேர்ந்த ஏழ்மையில் படிக்கும் பள்ளி மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில், சுவாமிமலை அருகே திம்மக்குடியிலுள்ள அருள்ஜோதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் முன் பரதநாட்டியமாடினர்.

    இது குறித்து தகவலறிந்த சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ, நேரில் சென்று, பரதநாட்டிய நடனத்தைப் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்து, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சாந்தி, உதவி ஆசிரியர் கலைச்செல்வி, தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் 239 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலை இசை பிரிவில் குரல் இசை, வீணை, வயலின் ஆகியவை முதன்மை பாடங்களாகவும், பட்டய பிரிவில் குரல் இசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம் ஆகியவை முதன்மை பாடங்களாகவும் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

    இத்துடன் இந்த கல்வி ஆண்டு 2022-23-ம் ஆண்டு முதல் இளங்கலை இசை பாடப்பிரிவில் அரசாணை எண் 209, சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையங்கள் பண்துறை நாள் 10-12-2021 வாயிலாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இளங்கலை மற்றும் இளங்கலை பரதநாட்டியம் பாடப்பிரிவுகளும் பட்டய பாடப்பிரிவில் நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.

    இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்வதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலை 3 ஆண்டுகள் பட்டயப டிப்பு படிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 21 வரை இருத்தல் வேண்டும்.நட்டுவாங்கம் 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.இளங்கலை இசை குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 முதல் 22 வரை இருத்தல் வேண்டும்.முதுகலை இசை குரலிசை, வீணை 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில இளங்கலை இசை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

    இசை ஆசிரியர் பயிற்சி 1 ஆண்டு பட்டயப் படிப்பு பயில 10ஆம் வகுப்புதேர்ச்சியுடன், இளங்கலை இசைப் பட்டம் (அல்லது) இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் தோச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.

    இசையில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயில கல்வித் தகுதி மற்றும் ஏனைய விவரங்கள் அறிய தொடர்புடைய கல்லூரியை அணுகவும்.மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது இணையவழியிலோ www.artandculture.tn.gov.in அதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் தொடர்புக்கு 04362- 261600 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×