search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuchipudi"

    • 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தொடர்ந்து 20-வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி - நாட்டிய நிகழ்ச்சி நாளை ( சனிக்கிழமை ) தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவினை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது.

    முதல் நாளான நாளை மாலை 6 மணி முதல் 19-ம் தேதி அதிகாலை 6 மணி வரை இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது சிறப்புக்குரியதாகும்.

    இவ்வாண்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடு களில் இருந்து 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் வதோதரா ரமேஷ் குபேர்நாத் தாஞ்சுர்கார், பெங்களூர் மிதுன் ஷியாம், அபர்ணா வினோத், சென்னை முனைவர் ஸ்வர்ணமால்யா, சித்ரா முரளிதரன், சிந்து ஷியாம், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், மைசூர் ஸ்ரீவித்யா ராவ், அகமதாபாத் ஸ்மிதா சாஸ்திரி, ஹைதராபாத் ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், முனைவர் விஜயபால் பல்ஹோத், ஒடிசா லக்கி மோஹன்த்தி, புதுதில்லி சாந்தனு சக்ரபோர்த்தி, காக்கிநாடா முனைவர் கிருஷ்ணகுமார், கோழிக்கோடு முனைவர் சுகந்திபாரதி சிவாஜி, உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சார்ந்த கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    பிரகன் நாட்டியாஞ்சலி 2023 விழா ஏற்பாடுகளை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்.

    இவ்விழாவில் திரளான பக்தர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வினை கண்டுகளித்து சிறப்பிக்க வேண்டுமாறு பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் மற்றும் கவுரவ செயலாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×