search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி பட்டறை"

    • நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கவிதை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கவிதை பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பாளை சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ரவி ஜேசுராஜ் சிறப்புரையாற்றி பயிற்சி பட்டறையை நடத்தினார். இதில் அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று கவிதைகள் எழுதினர். முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களின் கவிதைகள் நூலாக்கம் செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் வைடூரியம்மாள் தெரிவித்தார். கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 150 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு இலக்கிய மாணவிகள் தமிழ்ச்செல்வி, மகமுதாள், அப்ரின், சுகிர்தா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கவிமுற்ற செயலர் துர்க்காதேவி நன்றி கூறினார்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.
    • முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து முதலாமாண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற வழிகாட்டுதழும் அறிவுரை பகர்தலும் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. முஹம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஹமீது இபுராஹிம் முன்னிலையில் இந்த பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி மாவட்ட உயிர் மருத்துவ பொறியாளர் மற்றும் எழுத்தாளருமான முகம்மது யூசுப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி செல்பவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் வளம் பெற ஆசிரியர் பங்களிப்பு மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினர் ஜாதிய பாகுபாடுகளை களைந்து வேற்றுமையில் ஒற்றுமைக் காண ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிக அவசியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தகோபால் வாழ்த்தி பேசினார். முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் சீனி சுல்தான் இபுராஹிம் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முகம்மது யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • திருச்சி தேசியக்கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி பட்டறையின் முதல் கட்ட வகுப்பு இன்று தொடங்கியது
    • திருச்சி தேசியக் கல்லூரி மிகவும் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. சிறந்த அறிவியல் ஆய்வகம் மற்றும் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்

    திருச்சி:

    தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், சென்னை மற்றும் திருச்சி தேசியக்கல்லூரியும் இணைந்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இந்த பயிற்சி பட்டறை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் இந்த (ஜூலை) மாதத்திலும், அடுத்த இரண்டு நாட்கள் ஆகஸ்டு மாதத்திலும் நடைபெற உள்ளன.

    முதல் கட்ட இந்த பயிற்சி பட்டறையின் தொடக்க விழா இன்று (25-ந்தேதி, திங்கட்கிழமை) காலை கல்லூரி நூலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

    தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர். சினிவாசராகவன் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருச்சி தேசியக் கல்லூரி மிகவும் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. சிறந்த அறிவியல் ஆய்வகம் மற்றும் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

    இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறித்தினார்.

    பயிற்சி பட்டறை நிகழ்ச்சிக்கு தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 50 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், மண்ணியல், மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சிகள் கொடுக்க உள்ளனர்.

    இந்த பயிற்சி பட்டறையின் ஒருங்கினைப்பாளர், தாவரவியல் துறையின் தலைமை மற்றும் துணைமுதல்வர் முனைவர் ஏ.நந்தகோபாலன், வரவேற்புரையாற்றினார். பயிற்சி பட்டறையில் திறமையான பேராசிரியர்கள் பங்கியேற்று பயிற்சி அளிக்க உள்ளனர்.

    இந்த பயிற்சியானது நிச்சயமாக பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர், நகராட்சி துப்புரவு அலுவலர், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது. இதில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சிவா, லோகநாதன், மணிவண்ணன் மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது
    • பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா உயிர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரி, சர்வைட் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, இந்திரா கணேசன் இணை மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த செவிலிய மாணவ, மாணவிகள் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஏகநாதன், டாக்டர் மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியினை யோககுரு சின்னையன் பயிற்றுவித்தார்

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கல்வி பயிலரங்கம் டாக்டர்கள் கே. குணசேகரன், ராதாகிருஷ்ணன், சாய் விஸ்வநாத் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரால் நடத்தப்பட்டு செயல்முறை பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது.

    முன்னதாக கல்வி பயிலரங்கத்திற்கு வந்திருந்தவர்களை ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.கோவிந்தராஜ் வரவேற்று பேசினார்.

    மேலும் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரியின் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகளும் கல்வி புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பி.சசிப்பிரியா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    கல்வி பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற உதவி செய்த ஐதராபாத் அரவிந்த பார்முலா லிமிடெட் மற்றும் ஐதராபாத் தெர்போஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×