என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை நடந்த போது எடுத்த படம்.
ராணி அண்ணா கல்லூரியில் கவிதை பயிற்சி பட்டறை
- நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கவிதை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கவிதை பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பாளை சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ரவி ஜேசுராஜ் சிறப்புரையாற்றி பயிற்சி பட்டறையை நடத்தினார். இதில் அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று கவிதைகள் எழுதினர். முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களின் கவிதைகள் நூலாக்கம் செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் வைடூரியம்மாள் தெரிவித்தார். கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 150 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு இலக்கிய மாணவிகள் தமிழ்ச்செல்வி, மகமுதாள், அப்ரின், சுகிர்தா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கவிமுற்ற செயலர் துர்க்காதேவி நன்றி கூறினார்.
Next Story






