search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமதிப்பிழப்பு"

    • மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வருகிற அக்டோபர் 12-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
    • நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்று உள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வருகிற அக்டோபர் 12-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது. நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

    இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்று உள்ளார்.

    மொத்தம் 58 மனுக்கள் தாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டவை. அப்போது விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    அதன்பின் அந்த அமர்வு அமைக்கப்படாமல் இருந்ததால் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உள்ளதால் விசாரணை தொடங்குகிறது.

    ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

    குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


    ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

    அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

    வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

    இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ஒரு மாதத்தில் மக்களிடம் இருந்த பணப்புழக்கம் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Demonetisation
    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000  ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, புழக்கத்தில் இருந்த பண மதிப்பில் 86 சதவிகிதம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். 

    அதன் பின்னர், புதிய 2000, 500, 200 ரூபாய்கள் அச்சடித்து வெளியிடப்பட்டன. அதிக தேவை இருந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டன. 

    செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புழக்கத்தில் இருந்த 99 சதவிகித செல்லாத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் ஜூன் 30, 2017-ல் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னான ஒரு மாதத்தில் ரூ.7.8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.18.5 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல, ரிசர்வ் வங்கி புழக்கத்திற்கு விட்ட ரூபாயும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின் ரூ.8.9 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி புழக்கத்திற்கு விட்டிருந்த நிலையில், அது தற்போது ரூ.19.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதாவது, ரிசர்வ் வங்கி புழக்கத்திற்காக வெளியிட்ட மொத்த ரூபாயில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ளது. 

    நாட்டின் பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்னர் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது. செயற்கையான பணத்தட்டுப்பாடு சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 
    கோயம்புத்தூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் பிடிபட்ட சில நாட்களிலேயே இன்று ரூ.60 லட்சம் மதிப்புடைய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் குடோன் அமைத்து கள்ளநோட்டு அச்சடித்து சமீபத்தில் அக்கும்பல் போலீசில் சிக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நாமக்கலில் இருந்து வருவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார்.

    நீண்ட நாட்களாக வீடு பூட்டியிருந்த நிலையில், அவர்கள் திரும்பி வராததால் குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து வீட்டை சோதனையிட்டதில், ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடந்துள்ளன.

    பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×