search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் கூட்டம்"

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று தாிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்து.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதுதவிர காவடி ஆட்டம், பால்குட ஊர்வலமும் நடந்தது.

    நேற்றே மருதலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா முடிந்தாலும், இன்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    மருதமலை செல்லும் சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

    அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பாத யாத்தி ரையாக வந்த முருக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைகோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிரச் செய்தது.

    நேற்றை விட இன்று அதிகமான கூட்டம் காணப்பட்டது. மலைப்ப டிக்கட்டுகளிலும், மலைப்பா தையிலும் பக்தர்களாகவே காணப்பட்டனர். மலையடி வாரப்பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதன்காரணமாக அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது.

    அன்னூர் குமரன்குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தலும், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடை மற்றும் மாலை வழங்குதல், அபிஷேக பூஜையும் நடந்தது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி

    யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை வள்ளியம்மை திருக்கல்யாணமும், இரவில் யானை வாகன காட்சி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று காலை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரி வேட்டை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் ஒயிலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருந்தனர்
    • வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பேரூர்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை நாளில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்துவது வழக்கம்.

    பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி எள்சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில், ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழா சமயங்களில், கொரோனா தொற்று குறைந்தன் காரணமாக, பேரூர் படித்துறையில் திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக, இன்று காலை மகாளய அமாவாசையை யொட்டி, பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் படித்துறையில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். படித்துறையில் திரண்ட பக்தர்கள், பொதுமக்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தனர்.

    இதையடுத்து, பேரூர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மகாளய அமாவாசை வழிபாட்டை ஒட்டி, பேரூர் நொய்யல் படித்துறை, கோவில் நுழைவாயில் மற்றும் பேரூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழிபாட்டுக்கு, அதிகமான பக்தர்கள் திரண்டதால்,இன்று காலை பேரூர் பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பவுர்ணமியையொட்டி வந்திருந்தனர்
    • 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை 6.25 மணியளவில் பவுர்ணமி தொடங்கி நேற்று முன்தினம் மாலை 4.35 மணிக்கு நிறைவடைந்தது.

    பவுர்ணமியையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 3-வது நாளாக அலைமோதியது தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்க முடியாமல் சிலர் இடையில் நுழைவதற்காக இரும்பு தடுப்பு கம்பிகள் மேல் ஏறி இறங்கி சென்றனர்.

    இதனால் வரிசையில் வந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து கோவில் பணியாளர்கள் வந்து அதனை சரி செய்தனர்.

    இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • விடுமுறை நாள் என்பதால் திரண்டனர்

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வௌி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்ப ட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 2-ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

    இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    ×