search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பு"

    • பாபநாசம் அருகே பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஏ.ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் எம்.ஜெ.அப்துல்ரவூப், ராசகிரி பெரி பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜமாத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் ஜீயாவுதீன் பார்கவி நோம்பை திறந்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிஸ்வான் பள்ளியின் தலைவர் நூர்முஹம்மது, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மதுரபி, மற்றும் பாபநாசம் ராசகிரி, பண்டா ரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
    • நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

    அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கி ன்றனர்.

    இயேசுவின் சிலுவைப் பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் கிறிஸ்த வர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு தஞ்சை மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பங்குதந்தை அருட்திரு மரியசூசை, டி.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குனர் அருட்திரு விக்டர் அலெக்ஸ், உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணி பெர்டினான்டோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் சிலுவையிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இதேபோல் தஞ்சை, பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவால யங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இன்றில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7-ம் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 9-ந்தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.

    உலகப்புகழ் பெற்ற சமையல் கலை வல்லுனரான விகாஸ் கன்னா 26 ஆண்டுகளுக்கு முன்பு தன் உயிரை காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்திற்காக நோன்பு இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VikasKhanna
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற சமையல் நிபுணரான விகாஸ் கன்னா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமையல் நிபுணராக வருகிறா. சமையலில் டாக்டர் பட்டம் பெற்ற விகாஸ் கன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி மிகு சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    26 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்த போது கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதனால் யாராலும் ஓட்டலை விட்டு வெளியேற முடியவில்லை. சில நாட்களுக்கு ஓட்டலில் இருந்தார். பின்னர் கலவரம் சரியானதாக வந்த தகவலை அடுத்து தனது சகோதரனை சந்திக்க வெளியே சென்றார். அப்போது கலவர கும்பல் பல இடங்களில் இருந்தது. விகாசை பார்த்த முஸ்லீம் குடும்பம் ஒன்று அவரை தங்கள் வீட்டிற்குள் அழைத்து சென்றது.



    அவர் யார் என்று கேட்ட கலவர கும்பலிடம் தனது மகன் என கூறிய அந்த குடும்பத்தினர் இரண்டு நாட்கள் அவரை வீட்டிற்குள் வைத்து பாதுகாத்தனர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்ட பின் விகாசின் சகோதரர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நன்றி கூறி விகாஸ் வீட்டை விட்டு சென்றார்.

    தனது உயிரை காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் நடைபெறும் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருந்து வருகிறார். தனக்கு உதவி செய்த குடும்பம் எங்குள்ளது என்பது குறித்து தெரியவில்லை என சென்ற ஆண்டு விகாஸ் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில், விகாஸ் கன்னா அந்த முஸ்லீம் குடும்பத்தை கண்டறிந்து விட்டதாக தெரிவித்தார். அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அவரின் இந்த கதை அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #VikasKhanna
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலை நேரத்தில் உணவு உண்ட பின்னர், அன்றைய நோன்பை தொடங்குவார்கள். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நோன்பு வைப்பவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக குரான் வரிகளை கூறிகொண்டு ஒரு குழு வீதி வீதியாக செல்வார்கள்.

    இந்த பாரம்பரிய முறை கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இந்த பாரம்பரிய முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை குரான் வரிகளை மைக்கில் கூறிக்கொண்டே குழு ஒன்று வீதி வீதியாக சென்று நோன்பு கடைப்பிடிப்பவர்களை எழுப்பியுள்ளது. ரமலான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவம் தனது வழக்கமான சோதனை மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan
    சென்னை:

    இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.
    ×