search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்திய பூஜை"

    • இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சித்திரை : திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    நித்திய பூஜைகள்

    இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவையானவ:

    1. திருப்பள்ளி எழுச்சி காலை மணி 6.00 முதல் 7.00

    2. காலசந்தி காலை மணி 8.30 முதல் 10.00

    2. உச்சிக்காலம் காலை மணி 11.00 முதல் 12.00

    4. சாயரட்சை மாலை மணி 5.30 முதல் 6.30

    5. இரண்டாம் காலம் மாலை மணி 7.30 முதல் 8.30

    6. அர்த்தசாமம் இரவு மணி 8.30 முதல் 9.30

    திருவிழாக்கள்

    திங்கள் தோறும் நடைபெறுவன.

    சித்திரை: திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    வைகாசி : அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி: உத்திரத்தில் நடராசர் அபிஷேகம்.

    ஆடி: பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூஜை செய்வித்தல், இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல். அம்பாளுக்கு ஆடிப்பூர -பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். நிறைபணி, தேவேந்திரபூஜை, நவராத்திரி விழா, விசயதசமி அன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.

    ஐப்பசி: அசுபதியில் அன்னஆபிஷேகம், வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா.

    கார்த்திகை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறு அன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிஷேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.

    மார்கழி: தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.

    தை: சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பந்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.

    மாசி: இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.

    பங்குனி: சுக்லபட்சப் பிரதமையில் அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம், பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    • எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாச்சாரியரை காணலாம்.
    • மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தேவாசுரர் பாற்கடலை கடைந்தபோது மந்திர மலை பாரம் அதிகமாகிக் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. கடலுக்குள் மலை செல்லாத வண்ணம் திருமால் ஆமை உருவெடுத்து மந்திர மலையைத்தன் முதுகில் சுமந்து கடலைக் கடைய உதவியருளினார்.இது தான் (கமடம்) கூர்ம அவதாரம்.

    வருணன் மேற்கு திசைக்கு அதிபதி இதனால் தான் அவனுக்கு காட்சித் தந்த பெருமாளும் மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தெய்வத்திரு தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் விஸ்வகர்ம ஜெகத்குருவின் ஆத்ம நண்பரும், அநேக திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவினை செய்தவரும், சிறந்த தேவி உபாசகருமாகிய தெய்வத்திரு தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோவிலின் சைவ ஆகம பூஜை விதிப்படி நடத்த திருமழிசை சிவத்திரு ஈ.ஷண்முக சிவாசாரியார் அவர்களை நியமித்தனர் விஸ்வகர்ம பெருமக்கள்.

    அவர் மிகவும் பாடுபட்டு ஸ்ரீகாளிகாம்பாளின் அருளை உலக மக்கள் அறிய வைத்தார். அவர் 1961 செப்டம்பர் 21-ல் தேகவியோகம் ஆன பின் அவருடைய இளைய குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    இக்கோவிலின் திருப்பணியிலும் இதன் முன்னேற்றத்திலும் சைவத்திரு. டாக்டர். தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    குலபூஷணம் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்கள் இந்து தர்மத்தைக் கட்டி காத்து இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மகத்தான பணியில் திலகமாக விளங்கினார்.

    எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாசார்யர் அவர்களைக் காணலாம். உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்து வைக்கும் குட முழுக்கு விழாக்கள் பலப்பல, விழாக்கள் மூலம் வரும் தொகையை காளிகாம்பாள் தேவிக்கே திருப்பணிக்கே அளித்து வந்துள்ளார். இது யாம் அறிந்த உண்மை.

    வெள்ளிக்கிழமைகள் தோறும் கன்னி பூஜை நடத்திடவும் கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடந்திடவும் ஏற்பாடு செய்ததும் சிவாசாரியாரின் பெரு முயற்சியே திருக்கோவில் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிவத்திரு டாக்டர் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் ஆவார்.

    அவர் தேகவியோகம் ஆனபின், அவரது இளைய செல்வராகிய தி.சா.காளிதாஸ் சிவாசாரியார் `தந்தையர் ஒப்பர் மகள்' என்பதற்கிணங்க காளிகாம்பாள் கோவில் வளர்ச்சியில் அறங்காவலர்களும் ஆசார்யர்களும் இணைந்து அற்புதமான மேலைக்கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    திருக்கோவில் வளர்ச்சிக்கு 1. மூர்த்தம், 2. குருக்கள், 3. அறங்காவலர்கள் மூவரும் இணைவது தான் சக்தி மயம். மூர்த்தம் காளிகாம்பாள், குருக்கள்- குரு வடிவில்- தாயைக் காட்டுவித்தல்.

    அறங்காவலர் அறவழியில் நின்று ஆலயத்திற்கு சேவை நெய்தல், ஆலய பணியே அறப்பணி, அதற்கே தன்னை அற்பணி என்று அருட்பணி செய்தல்.

    இவ்மூவகை அம்சமும் திகழ்வது சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலே ஆகும். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை...!

    ×