search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின் கட்காரி"

    • தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார்.
    • சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும்.

    சென்னை-பெங்களூர் இடையே 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், 'சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன' என்று தெரிவித்தார்.

    சென்னை-பெங்களூர் 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இது மொத்தம் 262 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்ட தாக இந்த சாலை அமைகிறது.

    இது சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும். இந்த சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிகள் முடிந்துவிட்டால் சென்னையில் இருந்து 3 மணிநேரத்துக்குள் பெங்களூர் செல்ல முடியும்.

    இந்த சாலை 120 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் அதே வேகத்தில் பயணிக்க முடியும். சாலையின் இரு புறமும் வேலி அமைக்கப்படுவதால் விலங்குகள் சாலைக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

    இதில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சர்வீஸ் சாலை கிடையாது. 2 இடங்களில் மட்டுமே குடியிருப்புகள் வழியாக இந்த சாலை செல்கிறது. மற்ற பகுதி எல்லாமே திறந்த வழியாக செல்கிறது.

    • தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.
    • தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.

    புதுடெல்லி :

    வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளாமல், சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து அவற்றை தவறாக நிறுத்துகிறபோது அது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசுகையில்,

    "நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறேன். தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்புகிறபோது, அந்த குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறபோது, படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும்.

    அப்போது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்" என குறிப்பிட்டார்.

    வாகனங்களை நிறுத்துவதற்கு மக்கள் இடம் ஏற்படுத்திக்கொள்ளாமல், தங்களது வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வைத்து விடுகின்றனர் என அவர் வருத்தம் தெரிவித்தார்.

    சார்தாம் புனித தலங்களை இணைக்கும் வகையில் ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரத்தில் இருவழிச் சாலை அமைக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சார்தாம் திட்டத்திற்காக சாலையை விரிவுபடுத்துவதால் சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

    இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி  நிதின் கட்காரி கூறி உள்ளார். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவதாகவும், நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் ஒரு நாளைக்கு 40 கிமீ வேகத்தை தாண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

    உச்ச நீதிமன்றம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரத்தில் இருவழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், அடர்ந்த வனப்பகுதியில் மரங்கள், பாறைகளை வெட்டி சாலை அமைப்பதால் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் என்பதால், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், 10 மீட்டர் அகலத்திற்கு பதிலாக 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கலாம் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்காக கங்கை ஆற்றில் அமைக்கப்பட்ட முதல் முனையத்தை வாரணாசி நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMmodiinVaranasi #Varanasidevelopmentschemes #multimodalterminal
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் 5,369.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை சரக்கு கப்பல் போக்குவரத்து முனையத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும். உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத்  மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். 

    மேலும்,  1,571.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை மோடி இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த புதிய சாலைகள் மூலம் லக்னோ-வாரணாசி, அசாம்கர்-வாரணாசி, கோரக்பூர்-வாரணாசி, அயோத்தியா வாரணாசி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் மிச்சமாகும் என கருதப்படுகிறது.

    வாஜித்பூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் மோடி இன்றிரவு டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PMmodiinVaranasi  #Varanasidevelopmentschemes #multimodalterminal
    ×