search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்காரி
    X
    நிதின் கட்காரி

    சார்தாம் சாலைத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் -நிதின் கட்காரி தகவல்

    சார்தாம் புனித தலங்களை இணைக்கும் வகையில் ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரத்தில் இருவழிச் சாலை அமைக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சார்தாம் திட்டத்திற்காக சாலையை விரிவுபடுத்துவதால் சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

    இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி  நிதின் கட்காரி கூறி உள்ளார். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவதாகவும், நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் ஒரு நாளைக்கு 40 கிமீ வேகத்தை தாண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

    உச்ச நீதிமன்றம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரத்தில் இருவழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், அடர்ந்த வனப்பகுதியில் மரங்கள், பாறைகளை வெட்டி சாலை அமைப்பதால் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் என்பதால், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், 10 மீட்டர் அகலத்திற்கு பதிலாக 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கலாம் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×