search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாயக்கர் கல்லூரி"

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார்.

    மதுரை

    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுய நிதிப் பிரிவில் "ஆய்வு வடிவமைப்பு" என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்" நடந்தது. அமெரிக்கன் கல்லூரி இணைப் பேரா சிரியர் டாக்டர். சாமுவேல் அன்புச் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி எப்படி ஆராய்ச்சி நடத்துவது என்பது பற்றிய நுண்ணறிவு குறித்து விளக்கினார். மேலும் ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வடிவ மைப்பு, அறிக்கை எழுதுதல், நூல் பட்டியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர்.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மாணவர் கார்த்திக் வரவேற்றார். மாணவர் சம்யுக்தா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பாரதி, தினேஷ் குமார் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.

    • மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஜே.சி.ஐ. மதுரை லயன்ஸ் இணைந்து ஒருநாள் ரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வாழ்த்துரை வழங்கினார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். காசிநாததுரை வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் ராஜலிங்கம், காமராஜர் பல்கலைகழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா ளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, பெரியகருப்பன், திருஞான சம்பந்தம், மற்றும் வெங்க டேஷ நரசிம்ம பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×