திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார்.
திறன் மேம்பாட்டு பயிலரங்கம்
Published on

மதுரை

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுய நிதிப் பிரிவில் "ஆய்வு வடிவமைப்பு" என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்" நடந்தது. அமெரிக்கன் கல்லூரி இணைப் பேரா சிரியர் டாக்டர். சாமுவேல் அன்புச் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி எப்படி ஆராய்ச்சி நடத்துவது என்பது பற்றிய நுண்ணறிவு குறித்து விளக்கினார். மேலும் ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வடிவ மைப்பு, அறிக்கை எழுதுதல், நூல் பட்டியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர்.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மாணவர் கார்த்திக் வரவேற்றார். மாணவர் சம்யுக்தா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பாரதி, தினேஷ் குமார் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com