ரத்ததான முகாம்

மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்ததான முகாம்
Published on

மதுரை

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஜே.சி.ஐ. மதுரை லயன்ஸ் இணைந்து ஒருநாள் ரத்ததான முகாமை இன்று நடத்தியது.

கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வாழ்த்துரை வழங்கினார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். காசிநாததுரை வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் ராஜலிங்கம், காமராஜர் பல்கலைகழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா ளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, பெரியகருப்பன், திருஞான சம்பந்தம், மற்றும் வெங்க டேஷ நரசிம்ம பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com