search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஞ்சராயன் குளம்"

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

    • நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.
    • குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் 440 ஏக்கர் பரப்பளவில், நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தின் அருகே உள்ள 9 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்து குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளத்தை பாதுகாக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

    • 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி நஞ்சராயன் குளம்.
    • தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே திருப்பூர் மாநகரம் மற்றும் ஊத்துக்குளி வட்டத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நஞ்சராயன் குளம் தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்குளத்தில் 181 பறவை இனங்கள்,40 வகை பட்டாம்பூச்சிகள்,76 வகை தாவரங்கள்,11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழிடமாகவும்,வெளிநாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும்,800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் இயங்கிவருகிறது.40ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது. இந்தநிலையில் நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம்,ஈஸ்வரன்,நட்ராஜ் தாமோதரன்,இரவிச்சந்திரன்,நாகேந்திரன், குமார்,சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தற்போது இந்த குளத்தின் கரையில் இருந்து சாலை வரை ரூ.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் வெறும் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு தனியார் டிரஸ்டிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனம் தற்போது குளக்கரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது.எனவே சட்டப் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×