search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்குதேசம் கட்சி"

    • குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார்
    • பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.

    அமராவதி:

    நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

    அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 

    • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
    • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×