search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி போனஸ்"

    • அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் பனியன் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இந்தத் தொகையை பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அவா்களது வேலைக்கு ஏற்ப போனஸ் வழங்குவதை பனியன் நிறுவனங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
    • தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.

    எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×