search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி போனஸ்"

    • விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது

    இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே எஸ்டேட் உரிமையாளர் தெரிந்து கொண்டார்.
    • மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.

    கோத்தகிரி:

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனசாக வழங்குவது வழக்கம்.

    சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அந்த வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புல்லட் மோட்டார் சைக்கிளை வழங்கி அசத்தியுள்ளார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தேயிலை எஸ்டேட் உரிமையாளர்.

    கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அந்த பகுதியில் சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

    இவரது இந்த நிறுவனங்களில், 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுத்து அசத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது எஸ்டேட்டில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட், மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

    ஊழியர்களை திடீரென அழைத்த, எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார், உங்களுக்கான தீபாவளி பரிசு என சாவிகளை வழங்கியபோது, ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    உரிமையாளர் சிவக்குமார், தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்டனர்.

    அதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்பீல்டு கிளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளி பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார்.

    இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.

    இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    எங்கள் எஸ்டேட் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.

    ஊழியர்களை கவுரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்கள் 15 பேருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
    • நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.

    தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.

    தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.

    • ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.1.968.67 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்படி ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவு - கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    • முன்கள பணியாளா்களுக்கு பல ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
    • முன்களப் பணியாளா்களுக்கு போனஸ் தொகையினை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த முன்கள பணியாளா்களுக்கு பல ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், ஒப்பந்த முன்கள பணியாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. நகா்மன்ற தலைவா் வாணீஸ்வரி முன்களப் பணியாளா்களுக்கு போனஸ் தொகையினை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

    இதில், ஊட்டி நகா்மன்ற துணைத் தலைவா் ரவிகுமாா், ஆணையா் காந்திராஜ், ஊட்டி நகர திமுக செயலாளா் ஜாா்ஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ரவி, நாகமணி, விஷ்ணு, கஜேந்திரன், புஷ்பராஜ், ராஜா மற்றும் முன்கள பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.
    • அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

     திருப்பூர்: 

    திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: -

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மாத ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நலச்சட்ட விதிகளின்படி, தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை ஒப்பந்தம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.

    கோவை மாநகராட்சியை பொறுத்தவரை ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ. 3750 தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கடிதத்தின் படி, ஒப்பந்ததாரர்கள் தீபாவளிக்கு முறையான போனஸ் வழங்கும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களை போல் பெயரளவுக்கு கொடுக்காமால், முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்த உரிமையாளர்கள் வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு பணி மூப்பு மற்றும் படிப்புக்கு ஏற்ப பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

    உரிய தகுதி இருந்தும், பதவி உயர்வு இன்றி தூய்மைப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர். ஆனால் அதேசமயம் கல்வித்தகுதி இல்லாத பலர், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் கூறியிப்பதாவது:-

    ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீபாவளிக்கு அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக, தேவைப்படும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதேபோல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கள ஆய்விலும் ஈடுபடும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். சொந்த ஊரை விட்டு இங்கு வந்து ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். போனஸ் பணத்தை வாங்கி, பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக வழங்கப்படாதது, பஞ்சு, நூல் விலை உயர்வால் உற்பத்தி முடங்கியது போன்ற காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வும் விசைத்தறி உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் செய்த விசைத்தறியாளர்கள், மின் கட்டணத்தை அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுவரை விசைத்தறிகள் முழுமையாக இயங்கவில்லை.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு போனஸ் கிடைக்குமா என்ற இக்கட்டான சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும், தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விசைத்தறி உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மார்க்கெட் நிலைமை சீரான உடன் விசைத்தறிகளை முழு வீச்சில் இயக்க விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. வரும் வாரத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போனஸ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

    • சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்.
    • 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும்.

    தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
    • அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை டவுன், மதுரை புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர். பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகங்களான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் (மாஸ்டர் வீவர்) பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக அவர்கள் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    மாற்று வேலை வாய்ப்பின்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 30 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் 20 சதவீமும் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ஐக்கிய குழு நிர்வாகிகளான ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோபிநாத், பி.எம்.எஸ்.செயலாளர் சுதர்சன், ஜனதாதளம் பொருளாளர் ரவீந்திரன், ஏ.டி.பி. இணைச் செயலாளர் பத்மநாபன், சி.ஐ.டி.யு. ஈஸ்வரன்,

    எல்.பி.எப்.துணைத் தலைவர் ஜெகநாதன், துணைச் செயலாளர் தாமோதரன் ஆகியோருக்கும், நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளான மோதிலால், ராமபிரமம், கோவர்த்தனன், சுந்தர கோபால், சுப்பிரமணியன், சுரேஷ்பாபு, சிவநாத், பரமேசுவரன். சரவணன் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு (2023) தீபாவளி வரை அமலில் இருக்கும் என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

    • பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது.
    • பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    நிட்டிங், டையிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்.

    பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் வழங்கி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே, எவ்வித பிரச்னையும் ஏற்படாதவகையில் சுமூகமாக பேசி போனஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த அறிவிப்பு ரெயில்வே போலீசார், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு பொருந்தாது

    புதுடெல்லி:

    ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.

    மொத்தம் ரூ.1,832 கோடி போனஸ் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் தவிர்த்து, அரசிதழ் பதிவு பெறாத ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ரெயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ் கிடைக்கும்.

    ×