search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contract workers"

    • 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் :

    மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக நடப்பு சட்டப் பேரவை கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் எனக்கோரி தொ.மு.ச. சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    மின்வாரிய பொது ஒப்ப ந்த தொமுச. மாநிலஇணைப் பொதுச்செ யலாளர் ஈ.பி. அ.சரவணன், துணைத் தலைவர் ஈ.பி. செந்தில் என்ற பழனிசாமி ஆகியோர் சென்னையில் மின்சா ரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிடம் அளித்த மனுவில் கூறியிரு ப்பதாவது :- மின்சார வாரியத்தில் வயர்மேன், போர்மேன், பொறியாளர், களஉதவியாளர்கள், கணக்கீட்டாளர்கள் என 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்சார வாரியத்தில் மற்ற பிரிவு பணியாளர்களை விட வயர் மேன், உதவியாளர்கள் பணியிடங்கள்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்துபணியாற்றி வருகின்றனர்.

    ஆகவே நாளை 12-ந் தேதி நடைபெ றவுள்ள மின்வாரிய மானியக்கோரிக்கை யின்போது சிறப்பு கவனம் செலுத்திஅனைத்து ஒப்பந்ததொழிலா ளர்களையும் பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்நிலையில் ஒப்பந்த முழு ஊதியம் வழங்க ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 132 தூய்மை பணியாளர்கள், காவல் பணியா ளர்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் தினக்கூலி, 707 ரூபாய் வழங்காமல், 310 ரூபாயை வழங்குகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்த 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், மருத்துவ துறை அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு ஊதியம் வழங்கவும் ஒப்பந்த நிறுவனம் ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    • ஒப்பந்த தொழி லாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
    • 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

    பெருந்துறை,

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 4 நாட்களாக ஊதிய உயர்வு, வேலை நேர மாற்றம் மற்றும் வார விடுமுறை, சம்பளம், போனஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி யில் உள்ள அவர்களது மேலாளர் தலைமை மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இதில் அவர்களு க்குள் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இதில் தொழிலாள ர்களின் வேலை நேரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக பணி யாளர்கள் வேலைக்கு வர முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறை அதிக மாக உள்ளதால் தேவையான ஊழியர்களை மீண்டும் நியமித்த பின்பு வார விடுமுறை விரைவில் அறி விக்கப்படும் என தெரிவிக்க ப்பட்டது.

    சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பாக வரும் 13-ந் தேதி சென்னை யில் மேலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    அதில் ஏற்படும் முடி வைக் கொண்டு மறு பரிசீலனை செய்யப்படும் என தொழிலாளர்கள் தெரி வித்தனர்.

    தற்போது 4 நாட்களாக நடைபெற்று வந்த தொழி லாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று காலை முதல் அனைத்து துப்புரவு தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர்.

    • தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.

    பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

    நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.

    மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர் னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
    • தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.

    எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு நிலக்கரி கையாளுதல், பராமரிப்பு பணி போன்றவற்றை மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும், பணி நிரந்தரம், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மின்வாரிய அதிகாரிகளை ஏற்றி வந்த பஸ்சை அனல் மின் நிலையத்திற்குள் செல்ல விடாமல் சிறைப்பிடித்தனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் அனல் மின் நிலைய நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மாலை 3 மணிக்கு மேல் தொழிலாளர்கள் மற்றும் மின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளளது. அதற்கு பின்னர் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    தொழிலாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளுவது, சாம்பல் கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
    பெரம்பலூர் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.380 வழங்க கோரியும், கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அன்று மின்வாரிய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் மின்ஊழியர் மத்திய அமைப்பான சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழி லாளர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர் துறைமங் கலம் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் அகஸ்டின், பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் செல்லதுரை, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கலையரசி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 
    ×