search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விமான நிலையம்"

    • ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
    • பயணி தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த வாரம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஒரு பயணியிடமும், ரூ.41.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றொரு பயணியிடமும் என மொத்தமாக ரூ.49.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குருவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    இதில் சுமார் 25 பயணிகளிடம் இருந்து அவர் கொண்டு வந்த உடமைகளில் மறைத்து எடுத்து வந்த சுமார் 7.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.75 கோடி ஆகும். மேலும் இதுகுறித்து முழு தகவல்களும் விசாரணை நிறைவு பெற்ற பிறகு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமா ன நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் போதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.

    இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×