search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதை- 2 நாட்களில் ரூ.64 லட்சம் மதிப்பில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதை- 2 நாட்களில் ரூ.64 லட்சம் மதிப்பில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

    • கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமா ன நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் போதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.

    இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×