search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரித்து"

    • கலெக்டரிடம் புகார்
    • 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.

    திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது. அதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது. அஞ்சலகங்களில் தலா 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகளின் யோசனைப்படி தையல் தொழில் செய்து வரும் மகளிர் குழுவினர் தேசியக்கொடி தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளனர்.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வரும் 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் கொடுத்து தலா 2,000 தேசியக்கொடிகள் வீதம், 20 ஆயிரம் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- தேசிய அளவில், வீடுகள் தோறும் தேசியக்கொடி கட்டும் மக்கள் இயக்கம், விமரிசையாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டுப்பற்றை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் துணிகள் கொள்முதல் செய்து, 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கொடி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக மகளிர் திட்ட விற்பனை மையம் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×