போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரிப்பு

கலெக்டரிடம் புகார் 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரிப்பு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com