search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் போட்டி"

    • வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது.
    • 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 87 ரன்களும், 71 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 37 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன.

    சுப்மன் கில் 7 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் , விராட் கோலி ஒரு ரன்னி லும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்‌ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 100 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.

    அதே நேரத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.

    மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய வீரர்களை திணறடித்தார்.

    ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன் எடுத்து இருந்தார். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் அவுட் செய்தார்.

    74 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட் களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    8-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-அஸ்வின் ஜோடி ஆடியது. விக்கெட் இழக்காமல் இருக்கும் வகையில் இரு வரும் நிதானமாக ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசினர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அஸ்வின் 62 பந்தில் 42 ரன்னுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யார் 46 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    • வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை.

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.

    • கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
    • மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் சொதப்பினாலும் கடைசி ஆட்டத்தில் இஷான் கிஷனின் இரட்டை சதமும், விராட் கோலியின் சதமும் இந்தியாவுக்கு 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது. அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

    கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், ராகுல் ஆடுவார் என்று தெரிகிறது. வங்காளதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.

    அதன்படி, இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், முன்னதாக போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, வங்காளதேசத்திற்கு எதிராக முதலில் களமிறங்குகிறது.

    ×