search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் போட்டி"

    • 2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது.
    • அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், காமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    2ம் நாள் போட்டியின் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், காமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர்.

    மேலும், இந்திய அணி பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அபாரமாக விளையாடினார்.

    • ஆஸ்திரேலிய அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார்.

    அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், பார்டர்- கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட்டில், 2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    • கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர்.
    • கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
    • 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    • நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார்.
    • பிரதமர்கள் வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் நேற்று ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் இன்று அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண உள்ளனர். இதற்காக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் 4-வது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை நேரில் காண அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தந்தனர். இருவருக்கும் மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், இந்த போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமரின் வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது.
    • 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன.

    இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது.

    2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி உள்ளது.

    • நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 65 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 315 ரன் எடுத்தது. மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

    ஹாரிபுரூக் 184 ரன்னுடனும், ஜோரூட் 101 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஹாரி புரூக் 186 ரன்னிலும், ஜோ ரூட்153 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    இங்கிலாந்து 87.1 ஓவர்க ளில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், வில்லியம்சன் 4 ரன்னிலும், வில் யங் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் டாம் லாதம் (35 ரன்), நிக்கோலஸ் (30 ரன்) ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது.

    நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    • நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதல் டெஸ்டில் 3 நாளிலே தோல்வியை தழுவியதால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

    அஸ்வின்- ரவீந்திர ஜடேஜாவின் மந்திர சுழற்பந்தில் ஆஸ்திரேலியா நிலை குலைந்தது. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 20 விக்கெட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்திய சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.

    வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா நாக்பூர் டெஸ்டில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 120 ரன்கள் குவித்து அணி வலுவான நிலையை அடைய காரணமாக திகழ்ந்தார். இதே போல ஜடேஜாவும், அக்ஷர் படேலும் ரன்களை குவித்தனர்.

    தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் டெஸ்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் டெல்லி டெஸ்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது. ஒருவேளை ஸ்ரேயாஸ் அய்யர் உடல் தகுதி பெற்றால் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுவார்.

    முதல் டெஸ்டில் 3 நாளிலே தோல்வியை தழுவியதால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது.

    அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். லபுஷேன் மட்டுமே இந்திய பந்து வீச்சை சற்று சமாளித்தார். வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்த டெஸ்டில் ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

    அந்த அணியின் புதுமுக வீரர் மர்பி முதல் டெஸ்டில் அபாரமாக பந்து வீசினார். 7 விக்கெட் சாய்த்து முத்திரை பதித்தார். இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இந்தியா 31-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றன. 28 டெஸ்ட் 'டிரா' ஆனது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    • 144 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.
    • ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி தனது 9வது சதத்தை பதிவு செய்தார். அவர் 120 ரன்னும், ஜடேஜா 66 ரன்னும் (அவுட் இல்லை), அக்ஷர் படேல் 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். டாட் மர்பி 5 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 144 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஜடேஜா 70 ரன் எடுத்து இருந்த போது மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார். அவருக்கு கிடைத்த 6-வது விக்கெட்டாகும்.

    ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 328 ரன்னாக இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு அவரும், அக்ஷர் படேலும் இணைந்து 88 ரன் எடுத்தது.

    அடுத்து முகமது ஷபி களம் வந்தார். இந்திய அணி தொடர்ந்து ரன்களை குவித்தது. இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது.

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசல்வுட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும், டிரெவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    • முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 195 ரன்னும், ஸ்டீவ் சுமித் 104 ரன்னும் எடுத்தனர். மழையால் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருந்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 108 ஓவர்களில் 255 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 220 ரன் குறைவாகும்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா 'பாலோ ஆன்' ஆனது. பாலோ ஆனை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா 275 ரன் எடுத்து இருக்க வேண்டும். 20 ரன் குறைவாக எடுத்ததால் பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது.

    கேசவ் மதராஜ் அதிக பட்சமாக 53 ரன்னும், ஹார்பர் 47 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசல்வுட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும், டிரெவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    220 ரன்கள் பின்தங்கிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 41.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

    3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

    • தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது.
    • உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் குவித்து இருந்தது.

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகி யோர் சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 70 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கவாஜா 195 ரன்னும், ரென்ஷா 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது.

    ஆஸ்திரேலியா அதே ரன்னில் அதாவது 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்னில் 'டிக்ளேர்' செய்தது. உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது.

    தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது. கேப்டன் எல்கர் 15 ரன்னில் ஹாசல்வுட் பந்திலும், எர்வீ 18 ரன்னில் லயன் பந்திலும், கிளாசன் 2 ரன்னில் கம்மின்ஸ் பந்தி லும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டிலும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர்.
    • அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து இருந்தது.

    டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 200 ரன்னில் காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன் எடுத்தார். டிரெவிஸ் ஹெட் 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. ஹெட் 7 பவுண்டரி , 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார்.

    6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 14வது டெஸ்டில் விளையாடும் அலெக்ஸ் கேரிக்கு இது முதல் சதமாகும்.

    இதற்கு முன்பு 93 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன் கூடுதலாகும். அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ×